சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் சிறுமி பலாத்காரம் செய்து கொலை, 5 பேருக்கு தண்டனை- வீடியோ

    சேலம்: சேலத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், பழனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

    இவர்களது மூத்த மகள் பூங்கொடி. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வழக்கம் போல் இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.

    பாஜக இணையதளம் இன்னும் செயல்படவில்லை.. 15 நாட்களாக முடங்கியிருப்பதால் பரபரப்பு பாஜக இணையதளம் இன்னும் செயல்படவில்லை.. 15 நாட்களாக முடங்கியிருப்பதால் பரபரப்பு

    மது அருந்துதல்

    மது அருந்துதல்

    அப்போது இரவு 11 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் பாமக நிர்வாகி பூபதி (40), சினேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது அருந்தி விட்டு கதவு இல்லாத பரமசிவத்தின் வீட்டுக்கு வந்தனர்.

    5 பேரும் பலாத்காரம்

    5 பேரும் பலாத்காரம்

    அங்கு தூங்கிக் கொண்டிருந்த பூங்கொடியின் வாயை பொத்தி இரு சக்கர வாகனத்தில் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வாங்கி வைத்திருந்த மதுவை மீண்டும் குடித்து விட்டு அழுது கொண்டிருந்த சிறுமியை 5 பேரும் பலாத்காரம் செய்தனர்.

    நரபலி நாடகம்

    நரபலி நாடகம்

    இதை தாளமுடியாமல் சிறுமி துடிதுடித்து இறந்தார். இதை கூட தெரியாமல் இந்த காமுகன்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தனர். பின்னர் உடல் முழுவதும் மஞ்சள், விபூதியை பூசி மரத்தில் தொங்கவைத்துவிட்டு நரபலி நாடகம் ஆடியுள்ளனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    இதையடுத்து 5 பேரும் கிராமத்தினரும் ஒரே சமூகம் என்பதால் பரமசிவத்தை ஊரைவிட்டு விரட்டினர். இதையடுத்து அவர் வேறு ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என அவரை 5 பேரும் சேர்ந்து மிரட்டி வந்தனர்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த காவல் துறை 5 பேரையும் விசாரணை செய்து அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 5 பேர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Court upholds the punishment for Salem gang rape and murdering 9 years old girl.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X