• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அலறிய ஆத்தூர்.. அவங்களை உயிரோடு எரித்து கொல்ல இதுதான் காரணம்.. 16 வயது பேரனின் பகீர்.. மிரண்ட போலீஸ்

Google Oneindia Tamil News

சேலம்: தாத்தா, பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்றது ஏன் என்பது குறித்து கைதான 16 வயது சிறுவன் அளித்துள்ள வாக்குமூலமானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது கொத்தாம்பாடி பாரதியார் நகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் காட்டு ராஜா.. 75 வயதாகிறது..

இவருடைய மனைவி காசி அம்மாள்.. 65 வயதாகிறது.. கடந்த 12-ந் தேதி இரவு இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.. அக்கம்பக்கத்தினர் அந்த சத்தம் கேட்டு விரைந்து வந்தனர்..

இதற்குத்தான் 10.5% உள் ஒதுக்கீடு, ராஜ்ய சபா சீட்டா?.. தென் மாவட்ட ஓட்டையும் இழந்தோமே.. அதிமுக கோபம்! இதற்குத்தான் 10.5% உள் ஒதுக்கீடு, ராஜ்ய சபா சீட்டா?.. தென் மாவட்ட ஓட்டையும் இழந்தோமே.. அதிமுக கோபம்!

 பேரன்

பேரன்

வீட்டுக்குள்ளிருந்தும் அலறல் சத்தம் கேட்கவும், அவர்களை காப்பாற்ற முயன்றனர்.. ஆனால், வீட்டினுள் இருந்த வயதான தம்பதி 2 பேரும் உடல் கருகி அங்கேயே பலியானார்கள்... இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர்... அப்போதுதான், தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றது, அவர்களின் 16 வயது பேரன் என்பது தெரியவந்தது..

 வாக்குமூலம்

வாக்குமூலம்

சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. இந்நிலையில், சிறுவனின் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர்.. சிறுவன் அதில் சொன்னதாவது: "எனக்கு படிப்பு ஏறவே இல்லை.. எந்த நேரமும் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டே இருந்தேன்.. இதை என் அப்பா, அம்மா கூட கண்டிக்கவில்லை... ஆனால் தாத்தாவும், பாட்டியும் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.. அறிவுரை சொல்லி கொண்டே இருந்தனர்..

 பெரியப்பா

பெரியப்பா

என்னுடைய பெரியப்பா திமுக கட்சி பிரமுகர்.. அவர் பெயர் தேசிங்குராஜா.. இவரை ஒப்பிட்டு என்னை திட்டி கொண்டே இருந்தனர்.. "எங்க மூத்த பையன் எப்படி சம்பாதிக்கிறான் பாரு, அவனை பார்த்து பிழைக்க கற்றுக்கொள்... எங்கியாவது வேலைக்கு போ, ஏதாவது தொழில் கத்துக்கோ, இப்படி ஊரை சுற்றிக்கொண்டு இருக்காதே" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருந்தார்கள்.. அதை நான் பொருட்படுத்தவே இல்லை..அதனால் என்னை அடிக்கவும் செய்தனர்...

 அவமானம்

அவமானம்

அதனால், கடந்த 12-ந் தேதி இரவு, நான் மது அருந்திவிட்டு கொத்தாம்பாடி ஆற்றோரத்தில் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன்... அப்போது என்னுடைய பாட்டி அங்கே வந்தாங்க.. துடைப்பத்தாலும், குச்சியாலும் அடிச்சாங்க.. கடுமையா திட்டினாங்க.. இதெல்லாம் என்னுடைய நண்பர்கள் முன்னாடியே நடந்தது.. அதனால் எனக்கு அவமானமாகிவிட்டது..

 கைது

கைது

தாத்தா, பாட்டி 2 பேரையும் கொலை செய்ய திட்டம் போட்டேன்.. எங்க வீட்டில் 2 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது.. அதை எடுத்து கொண்டு, ஒரு பூட்டையும் எடுத்துக்கொண்டு தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றேன்... 2 பேரும் தூங்கும்வரை காத்திருந்தேன்.. பிறகு வெளிப்புறம் கதவை பூட்டிவிட்டு, கூரை வீட்டில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் சொல்லி உள்ளான்.. இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

English summary
Salem Grandparents burnt alive and 16 year old boy confessed to Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X