சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இளம் விதவைகளே குறி.. நிர்வாண படம் எடுத்து மிரட்டியவருக்கு கொரோனா.. கைது செய்த போலீசுக்கும் தொற்று!

கொரோனா பாதித்தவரை கைது செய்த போலீசுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கொரோனா பாதித்தவரை கைது செய்த சேலம் போலீசுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் தாதகாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் ஒரு பியூட்டிஷியன்.. தனியாக அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார்.

தங்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்றும், விபசார தொழில் இந்த பியூட்டி பார்லரில் நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் இவர் மீது 2 தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 நைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3 பேர் கைது நைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3 பேர் கைது

ஏழை பெண்கள்

ஏழை பெண்கள்

ஏழை பெண்களே லோகநாதன் தம்பதிக்கு குறியாக இருந்துள்ளது.. மேலும் பணத்துக்கு விழுந்துவிடும் பெண்களையும் இவர்கள் ஈஸியாகவே வழிக்கு கொண்டு வந்துள்ளனர்.. கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்கள், ஏழை பெண்கள் போன்றோரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர். ஒருவேளை இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தீபா அவர்களை ஆபாச படம் எடுத்து, அதை வைத்து கொண்டு மிரட்டுவார்களாம்.

தலைமறைவு

தலைமறைவு

3 பேர் கைதான நிலையில், லோகநாதன் மனைவி ரூபா தலைமறைவாகிவிடவும், அவர்களை தேடி வந்தனர். இந்த சமயத்தில்தான் கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

டெஸ்ட்

டெஸ்ட்

இதைகேட்டு அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குற்றவாளிகளை தாங்கள்தான் கைது செய்து கோர்ட் வரை கொண்டு சென்று ஆஜர்படுத்திவிட்டு, விடிகாலையில்தான் தங்களது வீட்டுக்கு சென்றோம், குழந்தைகளுடன் இருந்தோம் என்று அழுதபடியே சொன்னார்கள். லோகநாதனை கைது செய்ய மகளிர் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் சென்றிருந்தனர்.

சோதனை

சோதனை

கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேனிலும், மகளிர் போலீஸ் ஸ்டேனிலும் 3 பேரையும் வைத்திருந்தனர். இந்த கைது நடவடிக்கையில் கிட்டத்தட்ட 32 போலீசார் ஈடுபட்டனர். இப்போது இவர்கள் எல்லோருமே கருப்பூர் அரசு பொறியியல் காலேஜ் ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஆண் போலீசாருக்கும், நேற்று பெண் போலீசாருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.

ஆண் போலீஸ்

ஆண் போலீஸ்

அதில் ஆண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்தான் கைதானவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர் ஆவார். லோகநாதனை கைது செய்து வைத்திருந்த 2 போலீஸ் ஸ்டேஷன்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.. லோகநாதன் உட்பட 3 பேரும் ஓமலூர் கிளை சிறையில் உள்ளனர்.. அந்த ஜெயிலில் சிறை அதிகாரிகள் முதல் 81 கைதிகள் உள்ளனர்.. அங்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவருமே ஷாக்கில் உள்ளனர்.

English summary
salem harassing case issue: corona confirmed for policeman too
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X