சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலில் இளம் விதவைகள்.. அடுத்து ஏழை பெண்கள்... நிர்வாண படம் எடுத்து.. அதிர வைத்த கொரோனா கைதி!

சேலம் கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது: சேலம் கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: இளம் விதவைகளே முதல் குறி... அடுத்து ஏழை பெண்கள்.. இப்படி இளம்பெண்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய கொரோனா கைதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களும் விரைவில் சேலம் போலீசார் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் தாதகாபட்டியை சேர்ந்தவர் லோகநாதன்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் மனைவி தீபா ஒரு பியூட்டிஷியன்.. தனியாக அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார்.

தங்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டுகின்றனர் என்றும், விபசார தொழில் இந்த பியூட்டி பார்லரில் நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் இந்த தம்பதி மீது சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதீப் ஆகியோரை போலீசாரும் கைது செய்தனர். ஆனால் மனைவி ரூபா தலைமறைவாகிவிடவும், அவர்களை தேடி வந்தனர்.

முதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி!முதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி!

லோகநாதன்

லோகநாதன்

ஏழை பெண்களே லோகநாதன் தம்பதிக்கு குறியாக இருந்துள்ளது.. மேலும் பணத்துக்கு விழுந்துவிடும் பெண்களையும் இவர்கள் ஈஸியாகவே வழிக்கு கொண்டு வந்துள்ளனர்.. கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்கள், ஏழை பெண்கள் போன்றோரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர். ஒருவேளை இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தீபா அவர்களை ஆபாச படம் எடுத்து, அதை வைத்து கொண்டு மிரட்டுவார்களாம்.

சிறை

சிறை

கைதான லோகநாதன் உட்பட 3 பேரும் ஓமலூர் கிளை சிறையில் உள்ளனர். முன்னதாக, கைதான 3 பேருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. அதில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.. இதைகேட்டு அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.. கண்ணீர் விட்டு கதறி அழுதனர். குற்றவாளிகளை அவர்கள்தான் கைது செய்து கோர்ட் வரை கொண்டு சென்று ஆஜர்படுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றனர்.

கதறி அழுதனர்

கதறி அழுதனர்

குழந்தைகளுடன் வீட்டில் இருந்தோமே என்று அழுது கொண்டே இருந்தனர்.. பிறகு அன்னதானப்பட்டி போலீசாருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தவும்பட்டனர்.. அதில் ஆண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிறைக்கு வழிக்காவல் பணியாக அவரை அழைத்துச்சென்ற போலீசார் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

இந்நிலையில் கொரோனா கைதி லோகநாதன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் தந்தனர். இனி விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது.

English summary
salem harassing case issue: corona prisoner booked under goondas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X