சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காரிலேயே விரட்டி சென்று.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி சாய்த்த கொடூரம்.. பகீர் பின்னணி..!

சேலத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி கொன்றுள்ளனர்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் முன்விரோதம் காரணமாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது சம்பந்தமான பகீர் பின்னணி வெளியாகி உள்ளது.

Recommended Video

    சேலம்: முதல் மனைவி வீட்டிலிருந்து கிளம்பிய ரவுடி... நடுரோட்டில் வெட்டிக்கொலை..!

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை.. 34 வயதாகிறது.. இவர் ஒரு ரவுடி.. கொலை, கொலை முயற்சி, ரே‌‌ஷன் அரிசி கடத்தல் என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது. இவருக்கு 2 மனைவிகள். ஆனால், சமீப காலமாக எந்தவித குற்ற செயலிலும் செல்லதுரை ஈடுபடவில்லை.. மாறாக, நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தார்.

    Salem Naam Tamizhar Party member murdered due to Prejudice

    இந்நிலையில், சம்பவத்தன்று, முதல் மனைவியான ஜான்சி என்பவருடைய வீட்டுக்கு வந்தார்.. பிறகு இரவு 7,30 மணிக்கு, அங்கிருந்து காரில் கிளம்பி, அம்மாபேட்டையில் உள்ள 2-வது மனைவியான சுஜி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    எருமாபாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் திடீரென செல்லதுரை கார் மீது வேகமாக மோதியது... 2 கார்களில் இருந்து வந்த மர்ம கும்பலானது, செல்லதுரையின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.. இதனால் சுதாரித்து கொண்ட செல்லதுரை, காரில் இருந்து தப்பித்து இறங்கி ஓட பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் விரட்டி சென்று, தலையிலேயே சரமாரியாக வெட்டியது. இதில் செல்லதுரை சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    பாமக போட்ட பாமக போட்ட "அந்த" 2 கண்டிஷன்கள்.. கிறுகிறுத்து போன அதிமுக.. கூட்டணியில் விரிசலா.. என்னாகும்?

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, செல்லதுரையின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி விசாரணையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், இது முன்விரோதத்தினால் நடந்த கொலை என்பது தெரியவந்தது. செல்லதுரையின் நண்பர் ஜான்.. 2 பேரும் சேர்ந்துதான் பல குற்ற நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.. பிறகு ஒருகட்டத்தில் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது.

    இந்தநிலையில் செல்லதுரை சில மாதங்களுக்கு முன்பு அரிசி கடத்தல் வழக்கில் கைதானார்.. பிறகு குண்டர் சட்டத்திலும் கைதானார்.. ஆனால், இந்த குண்டர் சட்டத்தில் இருந்து விடுபட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் செல்லதுரை வெளியே வந்தார்...

    ஆனால், அரிசி கடத்துவதாக தன்னை போலீசாருக்கு காட்டிக் கொடுத்தது ஜான் என்பது செல்லதுரைக்கு தெரிய வந்ததால் அவர்களிடையே மோதல் அதிகரித்து வந்துள்ளது.. அதனால், மறுபடியும், ஜெயில், கைது என்று ஆகிவிடுமோ என பயந்து 2 மனைவிகளும் செல்லதுரையை வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தனர்... எனினும், மோதல் அதிகமானதால் தான் செல்லதுரையை கூலிப்படை ஏவி, ஜான் கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.. அதன்படியே, 20 பேர் கொண்ட கும்பலில் 7 பேர் கரூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    English summary
    Salem Naam Tamizhar Party member murdered due to Prejudice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X