சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா இல்லாத மாவட்டமாகியது சேலம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேரும் குணமடைந்து அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்ககப்பட்டனர். இதனால் சேலம் மாவட்டம் இன்று (மே 15) முதல் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டததில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருந்து மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக பூரண குணமடைந்த 3 நபர்களை மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் அவர்களை இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.

 Salem now corona free district in tamil nadu

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சி தலைவர் ராமன், முதல்வரின் தொடர்பு அறிவுரைகள் மற்றும்ஆலோசனைப்படி சேலம் மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நோய் தடுப்பு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா பாதித்தது 19 மாவட்டங்கள்.. எங்கு எல்லாம் இன்று கொரோனா பாதிப்பு அதிகம்.. முழு விவரம்கொரோனா பாதித்தது 19 மாவட்டங்கள்.. எங்கு எல்லாம் இன்று கொரோனா பாதிப்பு அதிகம்.. முழு விவரம்

சேலம் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றி சுகாதார பணியாளரக்ள், நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சேலம் மாவட்டத்தில் மார்ச் 23ம் தேதி, 4 இந்தோனேஷியர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த நபருக்கு முதல்முதலாக தொற்று உறுதி செய்யப்பட்டனது. இதன்பின்னர் இவர்களை சார்ந்தவர்களுக்கு தொற்று பரவியது. டெல்லி சென்று வந்தவர்கள் என 35 பேருக்கு தொற்று இருந்தது. இவர்கள் அனைவரும் குணம் அடைந்தனர். இதனால் சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது" என்றார்.

English summary
Tamil Nadu : Salem flattened the Covid-19 curve
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X