சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவு முழுவதும் காத்திருந்து மக்கள் பெற்று சென்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி- திராட்சை- ஏலக்காய், கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கோவையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்

10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்

இதையொட்டி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1,570 ரேஷன் கடைகள் உள்லன. இதில் சுமார் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

பல கடைகளில்

பல கடைகளில்

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு பொது மக்கள் தினமும் காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர். நேற்று மாலையில் கடைகளில் கூட்டம் குவிந்ததால், சேலம் நகரில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் இரவிலும் மின்விளக்கு வெளிச்சத்தில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர். பல கடைகளில் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பெற்றுச்சென்றனர்.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அதுபோல் ஓமலூரில் சில ரேஷன் கடைகளில் நேற்று இரவு மின் வெளிச்சத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்காட்டிலும் இரவு வரை மக்கள் காத்திருந்து பொங்கல் பரிசை பெற்று சென்றனர்.

இரவு நேரம்

இரவு நேரம்

எடப்பாடி நகராட்சியில் மொத்தம் 17,582 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். நேற்று சில கடைகளில் ஊழியர்கள் இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை (இன்று) வாருங்கள் என்று கூறினர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரவு 10 மணி வரை காத்திருந்து பொங்கல் பரிசு பெற்றுச்சென்றனர்.

English summary
Salem people gets Pongal gift materials in the night time also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X