சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்!

கையில் ஊசியுடன் வலம் வரும் மனநோயாளியை கண்டு பீதி ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 07-02-2020 | Oneindia tamil Morning news

    சேலம்: இவர் யார் என தெரியவில்லை.. கையில் ஊசியுடன் திரிகிறார்.. நடுரோடுகளில் ஊசியுடன் திரிந்து கொண்டிருக்கும் இந்த நபரை கண்டு சேலம் மக்கள் பீதியில் உள்ளனர்!

    சேலம் கலெக்டர் ஆபீஸ் எதிரில் அந்த நபர் சுற்றி கொண்டுள்ளார்.. அழுக்கு துணி, சடை விழுந்த முடி.. ஒடிசலான உடம்பு.. கறுத்த நிறம்.. ஆனால் தெளிவில்லாத நபர்!

    ஆம்.. இவர் ஒரு மனநோயாளி போலும்.. எந்த நேரமும் கையில் ஒரு ஊசியை வைத்து கொண்டே நடந்து கொண்டிருக்கிறார்.. அப்படியே போய் பொதுமக்களிடம் பிச்சையும் கேட்கிறார்.

    "உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு".. தாங்க முடியாத அவமானத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்

    தோற்றம்

    தோற்றம்

    தோற்றத்தை பார்த்ததும் பணம் கொடுக்க முன்வருபவர்கள்கூட, கையில் வைத்திருக்கும் ஊசியை பார்த்ததும் பயந்து ஓடுகிறார்கள். ஆனால் யாரையும் இவர் எதுவுமே செய்வதில்லை.. ஊசியால் குத்திவிடுவேன் என்று பாவ்லா செய்வதும் இல்லை. வழக்கமாக பார்க்கும் நபர்களுக்கு, இந்த இதை பற்றி தெரியும் என்றாலும், வெளியூர்காரர்கள் அலறி ஓடுகிறார்கள்.

    கையில் ஊசி

    கையில் ஊசி

    இப்படி மனநோயாளிகள் சேலத்தில் மட்டுமல்ல.. நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.. இதேபோல் ஊசியுடன்! இவர்கள் யாரையும் குத்த மாட்டார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.. எந்நேரமும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.. அப்படி நடந்தாலும் இவர்களை சட்டரீதியாக எதுவும் செய்யவும் முடியாது... ஆனால் இவர்களை அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் மீட்டு.. உரிய பாதுகாப்பை இவர்களுக்கு தந்து அதன்மூலம் மற்றவர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும்!!

    மருத்துவம்

    மருத்துவம்

    பெரும்பாலும் இப்படி மனநோயாளிகளாக திரிபவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போலும்.. ஏதோ ஒரு அசம்பாவிதத்தினால், மூளை கெட்டு.. இப்படி மனநோயாளிகளாகி விடும் இவர்களை குடும்பத்தினர் அம்போ என விட்டுவிடுகிறார்கள்.. மருத்துவம் பார்க்க வழியில்லாமல் தமிழ்நாட்டு பக்கம் செல்லும் லாரிகளில் ஏற்றி இறக்கிவிட்டு விட சொல்கிறார்கள். இங்கே தமிழகத்தில் இவர்கள் மொழி தெரியாமல்.. குளிர், வெயில், பனி, மழையில் தவித்து வருகிறார்கள்.

    உதவிக்கரம்

    உதவிக்கரம்

    பித்து பிடித்தவர்கள் என்று சொன்னாலும், பெரும்பாலும் இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.. அதிகபட்சம் கெட்டவார்த்தைகளில் திட்டுவார்கள்.. அதுகூட அவர்கள் மொழியில் திட்டி தீர்ப்பார்கள். ஆனாலும் அவர்களின் தோற்றமும், இனம் புரியாத அந்த சிரிப்பும் நம்மையும் அறியாமல் சில நேரங்களில் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. உண்மையில் இவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ தெரியாது.. ஆனால், கரம் நீட்டி இவர்களுக்கு உதவி வழங்க யாரேனும் முன்வந்தால் நல்லா இருக்கும்!

    English summary
    salem people panic about mentally challenged person
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X