சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலத்தில் இருந்து சென்ற அந்த லெட்டர்! பரபரத்துப்போன பிரதமர் அலுவலகம்.. உடனே நடந்த சம்பவம்! என்னாச்சு

Google Oneindia Tamil News

சேலம்: டெல்லியுள்ள பிரதமர் அலுவலகத்திற்குச் சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடியின் அலுவலகத்திற்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று சென்றுள்ளது. அதை அங்கிருந்த அதிகாரிகள் வழக்கம் போலப் பிரித்துப் படித்துள்ளனர்,

இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம் இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்

அப்போது அந்த கடிதத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டதும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் சோதனை செய்த அதிகாரிகள், அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரிக்கத் தொடங்கினர். அதில் அக்கடிதம் சேலத்தில் இருந்து வந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இது குறித்து சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 சேலம்

சேலம்

இதையடுத்து இது குறித்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா மற்றும் மத்திய புலனாய்வுத்துறை போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? அதை அனுப்பியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ஒருவரின் முகவரியும் இடம்பெற்று இருந்தது.

 போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

அவரிடம் சென்று மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில் மிரட்டல் கடிதத்தைத் தான் அனுப்பவில்லை என்றும் தனது பெயரில் வேறு யாராவது அனுப்பி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த 2024இல் இதேபோல நீதிபதி ஒருவருக்குத் தனது பெயரில் தனது உறவினர் ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்ததாகவும் அது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 ஓய்வுபெற்ற பேராசிரியர்

ஓய்வுபெற்ற பேராசிரியர்

இந்த தகவலின்படி அந்த நபரின் உறவினரான ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் பழனிசாமி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது 85 வயதாகும் பழனிசாமி படுத்த படுக்கையாக உள்ளார். எனவே அநப் தான் மிரட்டல் கடிதத்தை அனுப்பினாரா இல்லை அல்லது வேறு யாராவது அனுப்பினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பழனிசாமி உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Bomb threat letter has been sent to the Prime Minister’s Office from Salem: (பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய விவகாரம்) Salem ex professor Bomb threat letter to Prime minister office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X