சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்ணீரில் பைக் ஓடுமான்ற யோசனையை விடுங்க.. தண்ணீரிலேயே ஓடும் பைக்கை பாருங்க! சேலம் மாணவன் அசத்தல்

Google Oneindia Tamil News

சேலம்: மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நீரின் மேல் செல்லக் கூடிய இரு சக்கர வாகனத்தை பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

Recommended Video

    தண்ணீரிலேயே ஓடும் பைக்கை பாருங்க! சேலம் மாணவன் அசத்தல் - வீடியோ

    சேலம் மாவட்டம் ,மேட்டூர் வட்டம் கொளத்தூர் அருகே உள்ள இடும்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிங்காரவேலு (45). இவரது மனைவி பூங்கொடி(40). இவர்களது மூத்த மகன் தட்சிணாமூர்த்தி (19).

    இவர் காவிரிகிராஸ் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவன் தட்சிணாமூர்த்தி சிறுவயது முதலே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

    பச்சையப்பன் அறக்கட்டளை... ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா... துரைமுருகன் கேள்வி!! பச்சையப்பன் அறக்கட்டளை... ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா... துரைமுருகன் கேள்வி!!

    லாரி டியூப்

    லாரி டியூப்

    கடந்த வருடம் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தி அதன் மூலம் எரிவாயு உண்டாக்கி இரு சக்கர வாகனத்தில் பொருத்தி வாகனத்தை இயக்கி வந்தார். தற்போது 100 சி.சி. எஞ்சின் கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தின் இருபுறமும் காற்று நிரப்பிய லாரி டியூப்பை பொருத்தி வாகனத்தை தண்ணீர் மேல் இயக்கி வருகிறார்.

    காவிரி கரை

    காவிரி கரை

    இதுகுறித்து தட்சிணாமூர்த்தி தெரிவிக்கையில் காவிரிக் கரையை ஒட்டி எங்கள் வீடு அமைந்துள்ளதால் மறுகரைக்குச் எங்கள் உறவினர்களை பார்க்க செல்ல இந்த இரு சக்கர வாகனம் பயனுள்ளதாக இருக்கிறது. அரசு அல்லது தனியார் நிறுவனம் பொருளுதவி செய்தால் இது போன்ற பல கண்டுபிடிப்புகளை உருவாக்குவதாக கூறினார்.

    ஹீலியம்

    ஹீலியம்

    ஹீலியம் வாயுவை கொண்டு விமானத்தை உருவாக்கவும் அவர் முயற்சித்து வருகிறார். தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கக் கோரும் மத்திய அரசு இதுபோன்ற மாணவர்களை ஊக்குவிக்க நிதியுதவியோ அல்லது கடனுதவியோ வழங்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    இது போல் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவித்தால் ஏராளமான மாணவர்களிடம் இருந்து தனித்திறமைகள் வெளிக்கொணரப்படும். இதனால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்வேறு கண்டுபிடிப்புகள் வெளிப்படும். எனவே இதுகுறித்து தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

    English summary
    Salem Polytechnic student designed a motor cycle which can ride even in water bodies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X