சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலத்தில் நட்சத்திர தங்கும் விடுதியில் பாலியல் தொழில்.. தொழில் அதிபர்கள், பெண்கள் சிக்கியது எப்படி?

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் நட்சத்திர தங்கும் விடுதியில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக தொழிலதிபர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    சேலத்தில் நட்சத்திர தங்கும் விடுதியில் பாலியல் தொழில்.. தொழில் அதிபர்கள், பெண்கள் சிக்கியது எப்படி?

    சேலம் ஸ்டேட் பாங்க் காலனி அருகே உள்ள பிரபல நட்சத்திர தங்கும் விடுதியில் (சி.ஜே. பளாசியோ) இயங்கும் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து கொள்வதற்காக வினோத்குமார் என்பவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பெண்கள் வினோத்குமாரை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அவருக்கு உடன்பாடு இல்லாத நிலையில் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் காவல்நிலையத்தினர், சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வை வீழ்த்த செம வியூகம் வகுத்த இ.பி.எஸ்.. நாளை முதல் பிரசாரம்!உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வை வீழ்த்த செம வியூகம் வகுத்த இ.பி.எஸ்.. நாளை முதல் பிரசாரம்!

    மசாஜ் சென்டர்

    மசாஜ் சென்டர்

    அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்பா என்ற பெயரில்

    ஸ்பா என்ற பெயரில்

    சேலம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தொழிலதிபர்களான முள்ளுவாடிகேட் பகுதியை சேர்ந்த தீரஜ்குமார் மற்றும் அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு ஆகியோர் ஸ்பா எனப்படும் மசாஜ் சென்டர் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காப்பகத்தில் தங்கவைப்பு

    காப்பகத்தில் தங்கவைப்பு

    இதனையடுத்து மூன்று பெண்களையும் மீட்ட போலீசார், மசாஜ் சென்டரை நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொழில் செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சிக்கியது

    சிக்கியது

    இதனிடையே சேலம் அருகே காவல்துறையினர் பல்வேறு தடுப்புகள் அமைத்து துரத்தி சென்று, பிடிக்க முயன்றும் பிடிபடாமல் தப்பிசென்ற கார் சிக்கியது. அடையாளம் தெரியாத நபர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்ற நிலையில் காரை காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

    வாகனத்தை நிறுத்தவில்லை

    வாகனத்தை நிறுத்தவில்லை

    சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கசாவடியில் சொகுசு கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கார் செல்லும் வழியெங்கும் காரை நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். ஆனால் கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளார். இதையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முற்படும்போது காவல்துறையினர் மீது வாகனத்தை மோதுவது போல் வாகனத்தை இயக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.பின்னர் காவல்துறை ரோந்து வாகனங்கள் மூலம் பின்தொடர்ந்து சென்றபோதும் கார் மாற்று வழியில் சென்று தப்பியது.இதனைத் தொடர்ந்து தப்பி சென்ற காரினை காவல்துறையினர் தேடி வந்தனர்.

    சேலம் போலீஸ் விசாரணை

    சேலம் போலீஸ் விசாரணை

    இந்த நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நிற்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கார் நிற்கும் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் வழக்கு விசாரணை கருப்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காரின் எண்ணை வைத்து சோதனை செய்தபோது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சோகாராம் என்பவரின் பெயரில் உள்ளதால் தற்போது உரிமையாளரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரில் ஏதாவது கடத்தப்பட்டதா? அல்லது ஏதாவது குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பி வந்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Police have arrested two businessmen for allegedly engaging in Prostitution in the name of a massage center at a star hotel in Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X