• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெண்ணை நாசப்படுத்த முயன்ற ரவுடி கதிர்வேலு.. போட்டு கொடுத்த கூட்டாளி.. சேலம் என்கவுண்டர் பின்னணி

|
  போலீசிடமிருந்து தப்பி ஓடும் போது ரவுடி என்கவுன்டரில் கொலை- வீடியோ

  சேலம்: பெண் விவகாரம் மற்றும் முன்விரோதமே சேலம் ரவுடி கதிர்வேலு என்கவுண்டருக்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  நேற்று போலீசாரை தாக்கியதால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ரவுடி கதிர்வேலு. ஆனால் இவருடன் மேலும் சிலருக்கும் கொலையில் தொடர்பு உள்ளது என்பதும், பின்னணியில் பெண் விவகாரம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

  அதன் விவரம் இதுதான்: கடந்த 22-ம் தேதி நள்ளிரவு சேலத்திலிருந்து பெங்களூருக்கு பவானியை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தின் அடியில் முள்புதர் ஓரமாக அந்த ஜோடி ஒதுங்கியுள்ளது.

  கர்ப்பமானதால் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. காதலன் கைது

  ஆபாச வீடியோ

  ஆபாச வீடியோ

  அந்த நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தது. மேலும் காதலன் கண் எதிரிலேயே அந்த பெண்ணை சீரழிக்க முயன்றது. ஆனால் அந்த பெண்ணோ கற்பை காபாற்றிக் கொள்ள கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் சங்கிலியை கழட்டி கும்பலிடம் கொடுத்தார். அதனை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆனது.

  விசாரணை

  விசாரணை

  இதையடுத்து அளித்த புகாரின்பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த ரவுடி கும்பலின் பின்னணியில் வேறு ஒரு கும்பல் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் விசாரணையில், முருக்குவியாபாரி கணேசன் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அப்போது கணேசன் அப்ரூவராக மாறி தன்னுடன் இருந்த 4 பேர் கொண்ட கும்பலையே காட்டி கொடுத்துவிட்டார்.

  நடுரோட்டில் பிணம்

  நடுரோட்டில் பிணம்

  அதில் ஒருவர்தான் என்கவுண்டர் செய்யப்பட்ட கதிர்வேலு. போலீசில் கணேசன் அனைவரையுமே இப்படி போட்டு கொடுத்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் அவரை கொல்ல 4 பேரும் முடிவு செய்தனர். பின்னர் முறுக்கு வியாபாரி கணேசனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின்னர்தான் நடுரோட்டில் பிணத்தை போட்டுவிட்டு சென்றனர். இது சம்பந்தமான கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

  நகைகள் பறிமுதல்

  நகைகள் பறிமுதல்

  அப்போதுதான், கொண்டலம்பட்டி பெரியபுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், சுபாஷ், இளங்கோ, தினேஷ், தைலானூரை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய குற்றவாளியான கதிர்வேல் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

  குற்றச்சாட்டு

  குற்றச்சாட்டு

  இறுதியாக, கதிர்வேலுவையும் கைது செய்து அழைத்து வரும்போதுதான் போலீசில் இருந்து தப்ப முயன்று, பின் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆனால் அதேநேரம், காவல்துறையில் சரண் அடைய வந்த கதிர்வேலை திட்டமிட்டே சுட்டுக்கொன்று விட்டு நாடகமாடுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Salem Rowdy Kathirvel Encounter because of harass threaten to strip woman
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X