சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கிறது சேலம் உருக்காலை விவகாரம்.. குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கு மத்திய அரசின் முடிவினை கண்டித்து ஊழியர்கள் குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேபோல் திமுகவினரும் போராட்டத்தில் குதித்து இருப்பதால், உருக்காலை விவகாரம் விஸவரூபம் எடுத்துள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.

இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் முடிவை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கடந்த வாரம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது.

அப்போது எடியூரப்பா.. இப்போது குமாரசாமி.. கர்நாடக சட்டசபையில் தரமான சம்பவம் இருக்கு அப்போது எடியூரப்பா.. இப்போது குமாரசாமி.. கர்நாடக சட்டசபையில் தரமான சம்பவம் இருக்கு

தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்

இந்நிலையியில் நேற்று காலை சேலம் உருக்காலையில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் ஆலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர். காலை 8 மணி அளவில் உருக்காலையின் 2வது நுழைவு வாசல் முன்பு அனைத்து தொழிலாளர்களும் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட குடும்பத்தோடு திரண்டனர்.

எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

இந்த போராட்டத்தில் சேலம் எம்பி எஸ்ஆர் பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, உருக்காலையின் தொ.மு.ச. பொதுச்செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போத அவர்கள் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கல் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அரசை கண்டித்து கோஷம்

அரசை கண்டித்து கோஷம்

அப்போது இரும்பாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் வந்தனர். இந்த பேரணி 3வது கேட்டில் வந்தடைந்ததும். மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து உருக்காலை தனியார் மயமாக்கலை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

உலகலாவிய டெண்டர்

உலகலாவிய டெண்டர்

இந்த போராட்டத்தின் போது திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, சேலத்தில் உருக்காலையை நிறுவினார். ஆனால் எப்போதெல்லாம் பா.ஜனதா ஆட்சி மத்தியில் வருகிறதோ? அப்போது எல்லாம் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க முயற்சிகள் நடந்த வருகிறது. அதாவது, தனியாருக்கு விற்பனை செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னையில் போராட்டம்

சென்னையில் போராட்டம்

இதை தடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., பேசியுள்ளார். எனவே ஒருபோதும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விட திமுக அனுமதிக்காது. சேலத்தில் போராட்டம் நடத்தியதை போல் சென்னையிலும் உருக்காலைக்க நடத்த முடிவு செய்துள்ளோம்" இவ்வாறு கூறினார்.

English summary
salem steel plant privatisation : workers and protest with family on yesterday, dmk mp and mlas also participated in protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X