சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி

Google Oneindia Tamil News

சேலம் : வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராக்டரில் வந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர்.

Recommended Video

    டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி - வீடியோ

    டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

    Selam farmers supports delhi farmers rally and protest near district collector office

    வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்புரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு

    இதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசியக்கொடி ஏந்திக் கொண்டு விவசாயிகள் டிராக்டரில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

    மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

    English summary
    Selam farmers supports delhi farmers rally and protest near district collector office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X