• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புகையை போட்டு நகையுடன் தப்பிய மந்திரவாதி.. அப்படியே ஆடிப்போன ஆயிஷா!

By Staff
Google Oneindia Tamil News

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பில்லி, சூனியம் இருப்பதாக சொல்லி பூஜை செய்து கொண்டிருந்த போலி மந்திரவாதி அங்கிருந்த நகைகளுடன் மாயமானர்.

வீட்டில் பூஜை செய்வதாகக் கூறி வீடு முழுவதும் சாம்பிராணி புகையை போட்ட போலி மந்திரவாதி வீடு முழுவதும் புகை மூட்டம் சூழ கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

போலி மந்திரவாதியை நம்பி நகையை பறிகொடுத்துவிட்டதாக பெண் கொடுத்த புகாரில் போலீசார் குற்றவாளியை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. லுக் அவுட் நோட்டீஸ்?ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. லுக் அவுட் நோட்டீஸ்?

 பில்லி, சூனியம் என ஏமாற்றுவது

பில்லி, சூனியம் என ஏமாற்றுவது

பொதுவாகவே இந்தியா முழுவதும் காலையில் ஒரு மந்திரவாதி என்ற போர்வையில் ஒரு கும்பல் புறப்பட்டு வீதி வீதியாக செல்லும். பெரும்பாலும் பகல் நேரங்களில் ஆண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவதால் இது இவர்களுக்கு சாதகமான விஷயம். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் மூளைச் சலவை செய்து ஏதாவது ஒரு வகையில் பணம் பறிப்பது வழக்கம். அதற்கு சிறந்த வழி இவர்களை பொறுத்தவரை தன்னை மாந்தீரிகவாதிகள் என அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களுக்கு மந்திரமும் தெரியாது, தந்திரமும் தெரியாது. ஆனால் முடிந்தவரை பெண்கள் பிரச்சனையை தீர்ப்பதாகக் கூறி பூஜை என்ற பெயரில் ஏதாவது செய்து பணம், நகை பறிப்பது வழக்கம். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை ஏமாற்றி நகை பணம் பறிப்பதாக அடிக்கடி புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. காவல்துறையினரும் அவர்களை தேடி பிடித்து கைது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 போலி நபர்கள் அகப்படுவது அரிது

போலி நபர்கள் அகப்படுவது அரிது

ஆனால் பெரும்பாலான போலி மந்திரவாதிகளை பிடிக்க முடியவதில்லை. இதற்குக் காரணம் இவர்களுக்கென ஏதும் தங்குமிடம் கிடையாது. காலையில் புறப்பட்டு ஏதாவது ஒரு ஊரு ஆரம்பித்து நடந்து சென்றே அடுத்தடுத்த ஊருக்கு சென்று கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு இருப்பார்கள். இது தொடர்பான ஊடகங்களில் சமூக வலைதளங்களில் எவ்வளவு செய்திகள் வந்தாலும் சதுரங்க வேட்டை திரைப்படம் போல் மக்கள் திரும்பி திரும்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வகையில் தான் போலி மந்திரவாதி மூலம் மேலும் ஒரு குற்றம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சேலம் மாநகரில் லைன்மேடு அருகே உள்ள வடக்குத் தெரு பகுதியில் தனது மகளுடன் வசித்து வருகிறார் ஆயிஷா. இவரது கணவர் வெளியில் சென்றுவிட்ட நிலையில், இவர் வீட்டில் வாசலில் ஒரு போலி மந்திரவாதி நின்றுகொண்டு சில மந்திரங்களை ஓதியுள்ளார். ஆயிஷா வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால்தான் வருகின்ற வருமானம் அப்படியே வெளியில் சென்றுவிடுவதாகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கவில்லை எனவும் சத்தமாக பேசியுள்ளார்.

 போலி மந்திரவாதியை நம்பிய பெண்

போலி மந்திரவாதியை நம்பிய பெண்

தன்னை ஒருவர் பாராட்டும்போதோ அல்லது குறைகளை சொல்லும்போதோ அது என்னவென்று கவனிக்க மெய்மறந்து நிற்பது பெரும்பாலோனாரின் வழக்கம். போலி மந்திரவாதி கூறியதை நம்பிய ஆயிஷா அதற்காக என்ன செய்யவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஒரு சிறிய பூஜை வீட்டில் செய்தால் போதும், பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் எனக் கூறவே அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார் ஆயிஷா. இதையடுத்து பூஜைக்கான பொருட்களை வைத்து ஒரு சொம்பில் தண்ணீரை ஊற்றிய அந்த போலி நபர் கயிற்றில் கிடக்கும் செயினை அதில் போடுமாறு கூறியுள்ளார். முதலில் தயக்கம் அடைந்த ஆயிஷா பின்னர் அவரை நம்பி அதில் தனது இரண்டரை சவரன் தங்க நகையை அதில் போட்டுள்ளார். பின்னர் பூஜை தொடர்ந்தது. யாகம் வளர்த்துள்ளார் போலி மந்திரவாதி.

 புகை மூட்டத்தில் நகையுடன் தப்பி ஓட்டம்

புகை மூட்டத்தில் நகையுடன் தப்பி ஓட்டம்

யாகத்தின் புகை வீடு முழுவதும் பரவியது. வீடு தீப்பற்றி எரிந்தது போல் புகை அனைவரின் கண்ணை மறைக்க சொம்பில் இருந்த தங்க செயினுடன் எஸ்கேப் ஆனார் போலி மந்திரவாதி. புகை தணிந்து பார்த்தபோது அங்கு அந்த நபர் இல்லை. அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆயிஷா மனவேதனை அடைந்து காவல்துறையினரை நாடி ஒரு புகார் அளித்தார். ஆயிஷாவின் புகாரை ஏற்றுக்கொண்ட சேலம் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து போலி மந்திரவாதியை அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர். காவல்துறையினர் அவரை பிடிப்பதற்குள் இன்னும் எத்தனை வீடுகளுக்கு சென்று தனது கைவரிசைய காட்டப் போகிறார் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என அங்கிருந்தவர்கள் புலம்பித் தள்ளினர்.

English summary
The woman who was alone at home in Salem was enchanted with the jewels of the preacher who prayed to Aisha to solve the problems. Annathanapatti police are searching for the person on a complaint lodged by Ayesha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X