சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு

Google Oneindia Tamil News

சேலம்: 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது.

இதில் அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 குடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் குடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், எனது தாய், தந்தை இலங்கையில் இனப்போர் நடந்ததால் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.

குடியுரிமை

குடியுரிமை

அது முதல் சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் இருந்து வருகிறோம். நான் 1991-ஆம் ஆண்டு பிறந்தேன். நான் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்றுள்ளேன். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் இந்திய குடியுரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு உள்ளது.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

எனவே என்னை கருணை கொலை செய்துவிடுமாறு அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு குறித்து அந்த இளைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்திலேயே பிறந்து இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன்.

தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர்

எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.இது போன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது. கருணை கொலை செய்துவிடுமாறு ஆட்சியருக்கு மட்டுமில்லாமல் ஜனாதிபதி , தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

English summary
Srilankan Tamil Refugee gives memorandum seeks mercy killing as he was refused Indian Citizenship despite he was born and brought up in India for 25 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X