சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் கடிதம்: அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது... தமிழிசையின் அடடே பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் கடிதம் : அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது - தமிழிசை- வீடியோ

    சேலம்: தமிழகத்தில் ஸ்டாலின், ராகுல் கூடாரத்தை கலைப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறும் போது, பாஜக சார்பில் வரும் ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் வாக்குச்சாவடி மாநாடு 2500 இடங்களில் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது. இளைஞர்களை ஒருங்கிணைத்து நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் பாஜக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கும்.

    தேர்வு

    தேர்வு

    திமுகவைவிட கொள்கை மற்றும் தொண்டர் பலத்துடன் கூடிய வலுவான கூட்டணியை அமைக்கும். 2019ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிக எம்பிக்கள் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    முத்தலாக் மசோதா

    முத்தலாக் மசோதா

    இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்ய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் சம உரிமை பெறுவதை விரும்பாத மற்றும் வாக்கு வங்கியை எதிர்நோக்கியுள்ள கட்சிகள் மட்டுமே முத்தலாக் மசோதாவை எதிர்த்து வருகிறது.

    எந்த காரணம்

    எந்த காரணம்

    அதிமுக எம்பி அன்வர்ராஜா முத்தலாக் பற்றி கூறியது துரதிருஷ்டவசமானது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வரவேற்கத்தக்கது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது.

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை குறை சொல்வது சரியல்ல . 48 முறை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மூலம் 1300 கோடி ரூபாய் அந்நிய முதலீடு கிடைத்திருக்கிறது. இது கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட 20 சதவீதம் அதிகம்.

    செயல்படுத்தி

    செயல்படுத்தி

    அந்நிய முதலீட்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் வகிக்கிறது. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமே இதனை சாதிக்க முடிந்தது. மத்திய பாஜக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    காங்கிரஸ் ஆட்சியை விட 120 சதவீதம் கூடுதல் திட்டங்களை தமிழகம் பெற்றுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 89 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

    நிதி ஒதுக்கீடு

    நிதி ஒதுக்கீடு

    எதிர்க்கட்சிகள் இதை பற்றி ஏதும் பேச தேவையில்லை . கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பல்வேறு துறை சார்ந்த நிவாரணங்கள் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.6,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

    உணர்வுபூர்வமானது

    உணர்வுபூர்வமானது

    பிரதமர் மோடி சாமானிய மக்களுக்கு கடிதம் எழுதியதை எதிர்க்கட்சிகள் குறை கூறுவது சரியல்ல. அம்மாவுக்கு மகன் கடிதம் எழுதுவது போல இது உணர்வு பூர்வமானது. தமிழகத்தில் ஸ்டாலின் ராகுல் கூடாரத்தை கலைய வைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

    English summary
    BJP State President Tamilisai Soundararajan says that writing letter to people by PM Narendra Modi is like a letter write to mother by son (Modi).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X