சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட்.. பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சேலம்: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் சேலம் அடுத்த ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி, இந்த உத்தரவை எதிர்த்து உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்தார்.

Tamilnadu Government to appeal against National green tribunal order over Sterlite

முன்னதாக நிருபர்களிடம் கூட்டாக பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர், ஸ்டெர்லைட் விவகாரத்தை, தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்றும், இதை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் என்றும், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் செல்வோம் என்றும் அறிவித்தனர்.

English summary
Tamilnadu Government will appeal against National green tribunal order over Sterlite factory, in Supreme Court, says CM Edapadi Palanisamy. Earlier on this day, National green tribunal said on its verdict that Sterlite factory can be opened in Tuticorin within 3 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X