சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட இது நியூசிலாந்து இல்ல பாஸ்.. நம்ம சேலம்.. நச்சுன்னு ஒரு ஸ்டேடியம்.. நாளெல்லாம் சுத்தி பார்க்கலாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Salem Cricket Stadium | Dravid bowls to EPS

    சேலம்: பின்னணியில் மலை தொடர்ச்சி.. பச்சை பசேல் என்று புல்வெளி.. அப்படி ஒரு அழகான கிரிக்கெட் மைதானம்! இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றும்? தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் அல்லது, நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் ஸ்டேடியமாக இருக்கும், அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு மைதானம் என்று தானே?

    அல்ல.. அல்ல.. அந்த ஸ்டேடியம், தமிழகத்தின் மாங்கனி நகரம் சேலம் பக்கத்தில் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால் இனி நம்பித்தான் ஆக வேண்டும்.

    ஆம்.. சூப்பரான இயற்கை சூழ் பகுதியில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்.

    காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்

    வாவ் ஸ்டேடியம்

    வாவ் ஸ்டேடியம்

    இந்த ஸ்டேடியத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, திறந்து வைத்தார். இந்த ஸ்டேடியத்தின் ஏரியல் வியூ உள்ளிட்ட வீடியோக்களை பாருங்கள். எது.. சேலமா.. என்று நீங்களே ஆச்சரியத்தை வாய் திறப்பீர்கள். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஸ்டேடியத்தின் அவசியம்

    ஸ்டேடியத்தின் அவசியம்

    கிராமப்புற இளைஞர்களுக்கு இதுபோன்ற ஒரு மைதானம் வரப் பிரசாதம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறு நகரங்களில் இருந்துதான் வருவார்கள் என்று, ராகுல் டிராவிட் இந்த விழாவில் கூறியதை அப்படித்தான் பார்க்க வேண்டும். எவ்வளவு சிறப்பான கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சர்வதேச தரத்திலான மைதானத்தில், முதல் ஆட்டத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, கைகள் நடுங்கத்தான் செய்யும். புது சூழல் அவர்களின் திறமையை கட்டிப்போடும். ஆனால், ஆரம்பத்திலேயே, இப்படியான ஸ்டேடியத்தில் ஆடுவோர், சர்வதேச போட்டிகளில் ஆரம்பத்திலேயே எளிதாக ஜொலிக்க முடியும்.

    தோனி வருகிறார்

    தோனி வருகிறார்

    சேலம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்.. தோனி ஆடுவார் என சீனிவாசன் கூறிய வார்த்தைகள், சேலம் சுற்றுவட்டார கிரிக்கெட் விளையாட்டு இளைஞர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சர்வதேச வீரர்களை நெருங்கி பழகும் வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்கு சாத்தியமாகப்போகிறதே! தமிழகத்தில் சிறு நகரங்களிலும் கிரிக்கெட் மைதானம் அமைவது இது முதல் முறை கிடையாது.

    நத்தம்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெறும் மைதானங்களில் ஒன்று நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானமாகும். திண்டுக்கல் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுற்றிலும் இயற்கை வனப்பு சூழ்ந்த பிரதேசம். அந்த ஸ்டேடியத்தை டிவியில் பார்த்தவர்களும் வாயடைத்துதான் போனார்கள். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தைவிடவும் அழகாக இருந்தது என்.பி.ஆர் ஸ்டேடியம். அவ்வளவு ஏன், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானமான எம்.சி.ஜி போன்று இருக்கிறது அந்த மைதானம். பிட்சும், மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

    தமிழக கிரிக்கெட்

    ஆக.. தமிழகத்தில் ஒரு குயின்ஸ்டவுன், ஒரு எம்சிஜி ஸ்டேடியம் ரெடியாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்கு, வரிசையாக தரமான வீரர்களை வழங்கி வரும் மகாராஷ்டிரா/மும்பை போன்ற ஒரு நிலைக்கு தமிழகமும் விரைவில் வரும். அதற்கான படிக்கட்டுகளை இதுபோன்ற ஸ்டேடியங்கள் அமைத்துக் கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.

    English summary
    Tamilnadu small towns having international standard cricket stadiums, latest inclusion is Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X