சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஸ்சிலிருந்து திபு திருவென இறங்கி வந்த கும்பல்.. அடித்து நொறுக்கப்பட்ட தலைவாசல் "டோல் கேட்"

Google Oneindia Tamil News

சேலம்: தலைவாசல் டோல்கேட்டை நள்ளிரவில் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Recommended Video

    பஸ்சிலிருந்து திபு திருவென இறங்கி வந்த கும்பல்.. அடித்து நொறுக்கப்பட்ட தலைவாசல் டோல் கேட்

    ஆத்தூர் அருகே தலைவாசல் நத்தகரை டோல்கேட் இயங்கி வருகிறது. இந்த டோல்கேட்டை நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு சேலம் அருகே ஓமலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேல்முருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இதில், பங்கேற்பதற்காக, விழுப்புரம், கடலூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வேன் மூலம் நேற்று தொண்டர்கள் கூட்டத்திற்கு வந்தனர்.

    நள்ளிரவு

    நள்ளிரவு

    கூட்டம் முடிந்து நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணி வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் வேனில் பஸ்ஸில் புறப்பட்டு செல்லும் பொழுது நத்தகரை டோல்கேட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    டோல்கேட் கண்ணாடி

    டோல்கேட் கண்ணாடி

    அப்போது சிலர் டோல்கேட் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனையடுத்து தலைவாசல் போலீசார் விரைந்து வந்தனர். தாக்கியவர்கள் தப்பிவிட்டனர்.

    சிசிடிவி கேமரா

    சிசிடிவி கேமரா

    இதையடுத்து சிசிடிவி கேமரா வீடியோ உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சிலிருந்து வரிசையாக பலர் இறங்கி வந்து டோல்கேட் முகப்பில் தாக்குதல் நடத்தியுள்ளது வீடியோவாக பதிவாகியுள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு டோல்கேட்டில் பதட்ட நிலையில் காணப்பட்டது.

    தமிழக வாழ்வுரிமை கட்சி மறுப்பு

    தமிழக வாழ்வுரிமை கட்சி மறுப்பு

    அதேநேரம், தாக்குதலில் ஈடுபட்டது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கிடையாது என்று அந்த கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே டோல்கேட்டை தாக்கியது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Thalaivasal tollgate was smashed by some men at midnight. Those CCTV camera shots have released
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X