சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள தீவிரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் அரசுக்கு இல்லை.. குமுறும் மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சில நாட்கள் மட்டுமே தாங்கும் குடிநீர்... என்ன செய்ய போகிறது சென்னை

    சேலம்: லஞ்சம் பெறும் ஒரே நோக்கத்திற்காக தான் எட்டு வழிச்சாலை அமைக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    விவசாயிகள் தாமாகவே நிலங்களை அளிக்க முன்வந்திருப்பதால், எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேறிய தீரும் என்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    The intersection of 8 way road construction government does not have to solve the problem of drinking water

    அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராம மக்கள், பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமாக பேசிய மக்கள், எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றனர்.

    இத்திட்டத்தினால் வளர்ச்சி வரும் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் செயல். நிச்சயம் இது மக்களை அழிவு நிலைக்கு தள்ளக்கூடிய திட்டம் தான் என குமுறினர். தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் 500-க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் அழிந்துவிடும்.

    ஏராளமான விளைநிலங்களும் இத்திட்டத்திற்கு இரையாகிவிடும் என வேதனை தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் தெளிவாக கூறிய பின்னரும் எட்டு வழிச்சாலை அமைத்தே தீருவோம் என அரசு கூறுவதில் உள்நோக்கம் உள்ளது.

    பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்! பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!

    விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என ஒருபக்கம் கூறும் தமிழக அரசு, விளைநிலங்களை அமைத்து எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது முரணாக தெரியவில்லையா என விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தமிழகமே குடிநீரின்றி அல்லாடி வரும் நிலையில், அப்பிரச்சனையை தீர்க்காமல் இத்திட்டத்திலேயே குறியாக இருப்பதற்கு கமிஷன் வரும் என்பதே காரணம் என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். தமிழக அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால், பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

    English summary
    Farmers and civilians have accused the CM and the ministers of intensifying the Eighth way road for bribery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X