சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

234 தொகுதிகளிலும் நாங்கதான்.. விவசாய சட்டத்தால் பாதிப்பே இல்லையே.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி

Google Oneindia Tamil News

சேலம்: புதிய வேளாண்மை சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று, கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்தார்.

Recommended Video

    புதிய வேளாண்மை சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி - வீடியோ

    நாடு முழுக்க விவசாயிகள் புதிய வேளாண்மை மசோதாவை எதிர்த்து போராடும் நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கம் நல்லசாமி என்ன சொன்னார் தெரியுமா?

    நீங்களே பாருங்கள்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தப் போவதில்லை.

    ஒன்றுமே இல்லை

    ஒன்றுமே இல்லை

    விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க போவதில்லை. அதே மாதிரி, எதிர்க்கட்சிகள் சொல்வதை போல இது பெரிய பேரழிவை விவசாயத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த சட்டம் பத்தோடு பதினொன்று.. அத்தோடு இது ஒன்று. விவசாயிகளை குழப்புகின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்

    லஞ்சமோ லஞ்சம்

    லஞ்சமோ லஞ்சம்

    தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே, நெல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் உடனடியாக கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் அந்த கொள்முதலில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    கிலோவுக்கு 1 ரூபாய்

    கிலோவுக்கு 1 ரூபாய்

    கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு விவசாயின் நெல்லையும் கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்வதில்லை. ஊழல் லஞ்சம் முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் களையப்பட வேண்டும் என்றார்.

    கள் நல்ல பொருள்

    கள் நல்ல பொருள்

    மேலும், தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு உணவுப் பொருள் என்று நிரூபிக்கும் நபர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களை மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள் என கூறினார்.

    English summary
    The new agriculture law bill will not have any impact on farmers, said Nallasamy, chairman of the toddy movement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X