சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிற்பி மணிகண்டன் புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ! மனமுடைந்து போன சிற்பி!- வீடியோ

    சேலம்: "கஷ்டப்பட்டு சிலையை செஞ்சேன் சார்... அதை தூக்கி போட்டு அதிகாரிகள் உடைச்சிட்டாங்க.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோன்னு சொல்றாங்க" என்று விருது வாங்குவதற்காக செய்த சிலையை உடைத்தவர்கள் மீது சிற்பி குற்றஞ்சாட்டி உள்ளார்.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். 28 வயது இளைஞர். இவர் ஒரு சிற்பி. கடந்த 12 வருஷங்களாகவே சிற்பக்கலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    The Sculptor accused the Gov authorities near Salem

    தமிழ்நாடு அரசு நடத்தும் பூம்புகார் மாநில விருதுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி சிலையை வடிவமைக்க துவங்கி, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் முடித்து விருதிற்காக பதிவு செய்துள்ளார்.

    இந்த விருது வாங்குவதற்காகவே ஒரு ஸ்பெஷலான மர சிற்பத்தை வடிவமைத்தார். சிவநடனம் கோலத்தில் குமிழ் என்ற ஒரே மரத்தில் 45 நாட்களுக்குள் அந்த சிலையை செய்து முடித்தார் மணிகண்டன்.

    பிறகு செய்து முடித்த சிலையை தமிழ்நாடு கைத்திட தொழில்கள் வளர்ச்சிக் கழகம் அலுவலகத்தில் கொண்டு போய் ஒப்படைத்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் சிலையை வாங்கி உடைத்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார் மணிகண்டன்.

    சேதமடைந்த சிலையை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், விருதுக்கு அனுப்ப முடியாது என்று அதிகாரிகள் சொல்லி அவமானப்படுத்தியதாக மணிகண்டன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள் வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்

    இதை பற்றி அவர் சொல்லும்போது, "கஷ்டப்பட்டு செஞ்ச சிலை அது. ஆனால் அதை உடைச்சிட்டாங்க. சிற்பிகளின் அங்கீகாரம் அரசு கொடுக்கும் விருதுகள்தான். ஆனால் அதிகாரிகள் சிற்பிகளை அவமானப்படுத்துகின்றனர். உடைக்கப்பட்ட சிலை பத்தி கேட்டதுக்கு, எங்களை எதுவும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக்கோன்னு சொல்லி அவமானப்படுத்தறாங்க.

    ஒரு சிற்பியோ ஒரு கலைஞனோ மேலே வருவது எவ்வளவு கஷ்டம்? பலபிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சிற்பத்தை செஞ்சேன். முதல் போட்டியே இப்படி இருக்கு. இனி எப்படி கலந்து கொள்வது? எனக்கு கவர்ன்மென்ட் அவார்டே வேணாம். எனக்கான நீதியை அரசு பெற்றுத் தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    The famous Sculptor Manikandan has accused the gov authorities in Salem Collectorate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X