சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயங்கர வேகத்தில் வந்த லாரி.. அடுத்தடுத்து மோதல்.. சினிமா காட்சி போல பறந்த கார்கள்- தொப்பூர் வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் லாரி ஒன்று, அதிவேகமாக வந்து அங்கே நின்று கொண்டு இருந்த சுமார் 15 வாகனங்களில் மோதும் பகீர் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 தருமபுரியில் பயங்கர விபத்து - 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 4 பேர் பலி தருமபுரியில் பயங்கர விபத்து - 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 4 பேர் பலி

Recommended Video

    11 கார்களை பந்தாடிய சிமெண்ட் லாரி.. தொப்பூர் கணவாயின் பகீர் விபத்து வீடியோ..!

    சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தொப்பூர் கணவாய் பகுதி. சுமார் 8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பகுதியில் 4 கிலோமீட்டர் பகுதி மிகவும் ஆபத்தானது. சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் மார்க்கம் ஏற்றம். எனவே வாகனங்கள் மிகவும் மெதுவாக ஏற வேண்டியது அவசியம். மறுமார்க்கத்தில் பள்ளமான பகுதி என்பதால் வாகனங்கள் நிலைதடுமாறி வேகமாக வருவது வாடிக்கை.

    தொப்பூர் பயங்கரம்.. வரிசையாக மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி! நிரந்தர தீர்வுக்கு ஒரே வழிதான்- கலெக்டர்தொப்பூர் பயங்கரம்.. வரிசையாக மோதிய வாகனங்கள்.. 4 பேர் பலி! நிரந்தர தீர்வுக்கு ஒரே வழிதான்- கலெக்டர்

    இன்று மதியம் 3 மணியளவில் தொப்பூர் கணவாய் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மினி லாரி மோதி கொண்ட ஒரு சிறிய விபத்தின் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே வரிசையாக சில அடி தூரம் வரை வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

    ஆந்திராவிலிருந்து வந்த லாரி

    ஆந்திராவிலிருந்து வந்த லாரி

    அப்போது ஆந்திராவிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மல்டி ஆக்சில் லாரி ஒன்று அதிவேகமாக வந்து, நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது மோதியது. முதலில் ஒரு கார் மீது மோதி அதை அப்படியே தள்ளிக்கொண்டு செல்கிறது அந்த லாரி. அந்த கார் அதற்கு முன்பாக இருந்த கார்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு அப்பளம் போல நொறுங்கி விட்டது சில கார்கள் சினிமாவில் வருவது போல சில அடி உயரத்தில் பறந்து சென்று அடுத்த கார் மீது விழுகின்றன.. இவ்வாறாக பயங்கர சத்தத்தோடு அடுத்தடுத்து 15 வாகனங்கள் மீது அந்த லாரி மோதி உள்ளது.

    பள்ளத்தில் வேகமாக வந்த லாரி

    பள்ளமான பகுதி என்பதோடு, ஏற்கனவே லாரி மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்ததும் இந்த விபத்துக்குக் காரணம். அந்த லாரி ஒரு பஸ்சை முந்திக்கொண்டு வேகமாக வரும் காட்சி அதற்கு முந்தைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பஸ்சை முந்திக்கொண்டு வந்து முன்னால் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதும் காட்சி மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறை அந்த வீடியோக்களை ஆய்வு செய்து வருகிறது.
    அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    நல்லவேளை, பஸ் மீது மோதவில்லை

    நல்லவேளை, பஸ் மீது மோதவில்லை

    லாரி அந்த பஸ்சை ஓவர்டேக் செய்யும் போது, அந்த பஸ் மீது அதிர்ஷ்டவசமாக மோதவில்லை. ஒருவேளை மோதியிருந்தால் இந்த விபத்தில் உயிர் பலி இன்னும் அதிகமாகி இருந்திருக்கக்கூடும். முந்திக் கொண்டு சென்ற லாரி முன்னால் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதுவதை பார்த்த பஸ் டிரைவர், பிரேக் போட்டு ஒரு ஓரமாக நின்று விட்டார். பின்னால் வந்த வாகனங்களும் கட்டுப்பாட்டுடன் நின்று விட்டன.

    தருமபுரியில் சிகிச்சை

    தருமபுரியில் சிகிச்சை

    லாரி காரணமாக முன்னால் இருந்த வாகனங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் அவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இருப்பினும் தொப்பூர் வனப் பகுதிக்குள் பதுங்கியிருந்த லாரி டிரைவரை இரவோடு இரவாக கைது செய்துவிட்டது காவல்துறை.

    English summary
    Thoppur ghat road accident CCTV video released by the police, and a truck hit around 15 vehicles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X