சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது

லாரி டிரைவரிடம் பணம் பறித்த 3 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்-வீடியோ

    சேலம்: லாரி டிரைவருடன் ஜாலியாக இருந்துவிட்டு, அதற்குரிய பணத்தை வாங்கி கொண்டதோடு மட்டுமல்லாமல், மேலும் டிரைவரின் சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த 3 திருநங்கைகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே, குருவங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சுப்ரமணி. 52 வயதாகிறது. இவர், ராசிபுரத்திலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.

    three transgenders arrested near namakkal

    சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையாப்பட்டி பிரிவு அருகே, இரவு 11 மணியளவில், லாரியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கேபினில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது திருநங்கைகளான சுருதிகா 19, சஞ்சனா 20, நைனிகா 23, ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். லாரி டிரைவரிடம் உல்லாசமாக இருந்துள்ளனர். அதற்குரிய பணத்தையும் வாங்கி கொண்டனர். ஆனால், லாரி டிரைவர் சட்டைப் பையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயையும் மிரட்டிப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

    குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!

    இதுகுறித்து லாரி டிரைவர் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார், அப்போது அந்த நேரம் பார்த்து, அதே இடத்துக்கு ஆட்டோவில் திருநங்கைகள் திரும்பவும் வந்தனர்.

    அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, 3 பேரும் தப்பிவிட்டனர். ஆனால், ஆட்டோ டிரைவர், திருமுருகன் என்பவர் மட்டும் மாட்டிக் கொண்டார். இதையடுத்து இவர் அளித்த தகவலின்பேரில், இவர் உட்பட மற்ற 3 திருநங்கைகளையும் போலீசார் கைது செய்து, 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    English summary
    four people including three transgenders arrested in money theft case by namakkal police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X