சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்!

மக்களோடு மக்களாக சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு செலுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ

    சேலம்: வெள்ளை வேட்டி - வெள்ளை சட்டை, விபூதி சகிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்.

    எடப்பாடி பழனிச்சாமிக்கு இது மிக முக்கியமான தேர்தல். 2 வருடம் முடிந்ததைவிட வரப்போகும் 3 வருடம் எப்படி இருக்க போகிறது என்பதை நிர்ணயிக்க கூடிய தேர்தல்.

    அதுவும் சொந்த தொகுதியில் தன் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளார். அவரது வெற்றியில்தான் எடப்பாடி பழனிசாமியின் கவுரமே அடங்கி உள்ளது. இதற்காகத்தான் சென்ட்டிமென்ட்டாக கடைசி தேர்தலை சேலத்தில் வந்து முடித்தார். இதற்காக வீதி வீதியாக நடையாய் நடந்துவாக்கு சேகரித்தார்.

    சர்காரை தேர்வு செய்ய லைனில் நின்ற விஜய்.. ஆட்டோகிராப் கேட்டு ஓடி வந்த குட்டிஸ்.. திரண்ட கூட்டம்! சர்காரை தேர்வு செய்ய லைனில் நின்ற விஜய்.. ஆட்டோகிராப் கேட்டு ஓடி வந்த குட்டிஸ்.. திரண்ட கூட்டம்!

    சிலுவம்பாளையம்

    சிலுவம்பாளையம்

    அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    சிலுவம்பாளையம்

    சிலுவம்பாளையம்

    அவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    பளிச் புன்னகை

    பளிச் புன்னகை

    அதன்படி சரியாக 8 மணிக்கு வெள்ளை-சேட்டி, விபூதி என வழக்கமான பளிச்சுடன் வந்தார் முதல்வர். கையில் வெள்ளை கலர் கர்சீப் வைத்திருந்தார். வீட்டுக்கு பக்கத்திலேயேதான் இந்த வாக்கு சாவடி உள்ளது. அதனால் நடந்தே வந்தார் முதல்வர்.

    வரிசை

    வரிசை

    அப்போது ஏராளமான போலீசார் முதல்வரின் பாதுகாப்பு பின் நின்றிருந்தாலும்,அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் நடந்து போய் கொண்டிருந்தனர். சாவடிக்கு வந்த முதல்வர், கியூவில் போய் நின்று கொண்டார். அங்கு மக்களோடு மக்களாக இணைந்து தன் வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.

    வரலாறு

    வரலாறு

    தமிழகத்தில் ஒரு முதல்வர் இப்படி சர்வ சாதாரணமாக ஒரு கிராமத்து வாக்குச் சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்ததைப் பார்த்து பல காலமாகி விட்டது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தது வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டது.

    English summary
    TN Chief Minister Edapadi Palanisamy casts his vote in Salem Siluvampalayam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X