சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விழித்திருந்த தம்பி- சேலம் ஷாக்

Google Oneindia Tamil News

சேலம்: உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவர் சாகும்வரை விடிய விடிய விழித்திருந்த தம்பியின் செயலால் சேலம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Recommended Video

    உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நபர்.. சேலத்தில் அரங்கேறிய கொடூரம் - வீடியோ

    சேலம் கந்தம்பட்டியில், பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் சரவணன்(70). இவர் அண்ணன் பாலசுப்பரமணிய குமார் இறந்து விட்டதாக கூறி நேற்று குளிர்சாதனப் பெட்டிக்காக தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து குளிர்சாதனப்பெட்டி பணியாளர்கள் சம்மந்தப்பட்ட சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துவிட்டு இன்று பிற்பகல் வருவதாகக் கூறிச் சென்றனர்.

    சென்னை திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டுசென்னை திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு

    குளிர்சாதன பெட்டியில் துடித்த முதியவர்

    குளிர்சாதன பெட்டியில் துடித்த முதியவர்

    அதன்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

    விடிய விடிய ஐஸ் பாக்ஸில்..

    விடிய விடிய ஐஸ் பாக்ஸில்..

    அவர்கள் வந்து பார்க்கும் போது முதியவர் குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குளிர்சாதன பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்பரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆன்மா காத்திருக்கிறதாம்..

    ஆன்மா காத்திருக்கிறதாம்..

    மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாலசுப்ரமணிய குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு போராடிய அவரை இறந்துவிட்டதாக கூறி குளிர்சாதனப் பெட்டியை வரவழைத்து, பெட்டிக்குள் வைத்து மூடி உள்ளனர். குளிர்சாதனைப்பெட்டி எடுக்க வந்த தொழிலாளர்கள், அவர் உயிரோடு இருப்பதாக கூறி, கேள்வி எழுப்பியபோது, அவர் ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை, அதனால் தான் அவரது உயிர் பிரியும் வரை உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறி கூறி அவர்களை திரும்பி அனுப்பியது தெரியவந்தது.

    சேலம் பொதுமக்கள் அதிர்ச்சி

    சேலம் பொதுமக்கள் அதிர்ச்சி

    இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை வர வைத்து அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. பின்னர் உடனடியாக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணிய குமாரை அனுப்பி வைத்தனர். உடல் நலம் பாதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடைத்து, இறந்துவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிய சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Salem Police Shocked over the Horror act against Brother.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X