சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்

Google Oneindia Tamil News

சேலம்: ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு செல்வதற்காக அடிவாரம் பகுதியில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் திரண்டனர். இ பாஸ் பெறாதவர்களை காவல் துறையினர் மூலம் திருப்பி அனுப்பியதால் காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

Recommended Video

    ஏற்காடு மலையடிவாரத்தில் இ பாஸின்றி குவிந்த மக்கள் - வீடியோ

    கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து தற்போது 8ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு இந்த மாதம் முதல் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் இ பாஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் பெற வேண்டுமென அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

    தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்.. மனைவி, குழந்தைகள் பத்திரமாக மீட்புதாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்.. மனைவி, குழந்தைகள் பத்திரமாக மீட்பு

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    அதன்படி சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்வதற்காக திரண்டு இருந்தனர்.

    வாகன ஓட்டிகள்

    வாகன ஓட்டிகள்

    அவர்களை ஏற்காடு அடிவாரத்திலுள்ள சோதனை சாவடியில் போலீஸார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இ பாஸ் பெற்ற நபர்கள் மட்டும் ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் இ பாஸ் பெறாமல் வந்த வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

    வாகன ஓட்டிகள்

    வாகன ஓட்டிகள்

    இதனால் இ பாஸ் பெறாத வாகன ஓட்டுநர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சேலம் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அன்பு, இ பாஸ் பெற்றுதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியதை அடுத்து வாகன ஓட்டிகள் திரும்பி சென்றனர்.

    ஏற்காடு சுற்றுலா தலம்

    ஏற்காடு சுற்றுலா தலம்

    இன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு படையெடுத்துள்ளதால் அங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Tourists gathered in Yercaud base without E Pass. Police allowed the tourist those who have got E Pass.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X