சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலம் மாவட்டத்தில் திடீர் கெடுபிடி.. 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு.. காய்கறி வாங்ககூட வெளியே வரக்கூடாது

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் முழுக்க இன்று மதியம் 1 மணி முதல் திங்கள் கிழமை காலைவரை, 2 நாட்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக அந்த மாவட்ட கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார்.

மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றைத் தவிர, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துமே இரண்டு நாட்களுக்கும் மூடப்பட்டு தான் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two days full lockdown imposed in Salem District

வாகனங்கள் மூலம் வீடுவீடாக காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி ஏதாவது காரணம் சொல்லி கொண்டு வெளியே வருவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக பரவல் என்ற நிலையை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 6000 குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறி.. களமிறங்கி அசத்தும் அதிமுக நிர்வாகிகள்!திருச்சியில் 6000 குடும்பங்களுக்கு விலையில்லா காய்கறி.. களமிறங்கி அசத்தும் அதிமுக நிர்வாகிகள்!

Recommended Video

    வெளியே சுற்றிய இளைஞர்களை கதற விட்ட திருப்பூர் போலிஸ்

    சேலத்தில் நேற்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் அண்டை மாவட்டமான ஈரோட்டில் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக ஆட்சியர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    No one should comes out from their house from today to Monday morning, vegetables will be supply at the door steps, says Salem District Collector Raman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X