சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்க வேண்டியதை ஏன் கையில் எடுத்தீர்கள்.. ரஜினிகாந்துக்கு வைகோ கேள்வி

Google Oneindia Tamil News

சேலம்: மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என்றும் மறக்க வேண்டியதை ஏன் ரஜினி கையில் எடுத்தீர்கள் என ரஜினிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்திலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில் இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. பருக் அப்துல்லா 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அள்ளி திரித்தது போல சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளனர். காங்கிரசில் இருந்த போது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில் இந்தியை எதிர்த்து அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா வடிவத்திலும் திணிக்க பட்டு வருகிறது.

தன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணிதன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி

ஜல்சக்தி

ஜல்சக்தி

அமைச்சரவை பெயரை கூட ஜல்சக்தி என்று வைத்துள்ளனர். மத்திய அரசு மும்மொழி திட்டத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்திப் பிரச்சனை ஒரு பக்கம் உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழகம்

தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டதினை செயல்படுத்துவதன் மூலமாக டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வீணாகி விடும். மேலும் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டி விட்டது. ஒரு பக்கத்தில் தண்ணீர் வராமல் தடுத்து விட்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக தமிழகத்தை வஞ்சிக்க மத்திய செயல்படுகிறது.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என கூறுவதால் தமிழக மக்கள் பாதிக்கபடுகின்றனர். இதனால் எல்லாம் வகையிலும் தமிழகம் பாதிக்க நேரிடும். மக்களுடைய நலனுக்காக எட்டு வழிச்சாலை இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் வஞ்சகமாக செய்ய கூடிய திட்டங்களுக்கு எல்லாம் தமிழக அரசு கைகட்டி வாய்கட்டி சேவை செய்யும் அரசாகவும் கொத்தடிமை போல் செயல்படுகிறது.

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

மக்கள் எதிர்த்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பாதுக்காக்க தமிழக அரசு செயல்படவில்லை.

ஆய்வு

ஆய்வு

தமிழகத்தில் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து தமிழக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது வெட்ககேடு. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை

உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களில் எதையும் செய்ய மாட்டோம் என அமைச்சர் கருப்பண்னன் கூறுவது பொறுப்பற்ற பேச்சு. தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதற்கு மத்திய உள்துறைக்கு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தாக ஆளுநர் மாளிகை கூறுகிறது.

 ரஜினி பேசியது

ரஜினி பேசியது

7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் இருக்கு? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கான முடிவு வெளிவரும். மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார். மறக்க வேண்டியதை ஏன் கையில் எடுத்தீர்கள் என ரஜினிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழர்களின் பாரம்பரியம் , இன உணர்வு போன்றவைகளை மறைக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெறுவதில் அதில் ரஜினி பேசியது ஒன்றும் என வைகோ கூறியுள்ளார்.

English summary
MP Vaiko says that Why Rajinikanth speaks about the issue which is to be forgotten?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X