சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி VS வீரபாண்டி ஆறுமுகம்... ஸ்டாலின் VS வீரபாண்டி ராஜா.. தலைமுறையாய் தொடரும் யுத்தம்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மாற்றங்களில் சேலம் பஞ்சாயத்து இப்போதைக்கு அடங்காது என கொந்தளிக்கின்றனர் சேலம் வீரபாண்டி ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள்.

சேலத்து சிங்கம் என்று திமுகவினரால் போற்றப்பட்டவர் வீரபாண்டி ஆறுமுகம். தொண்டர்களின் செல்வாக்கால், தொடர் வெற்றிகளால் கருணாநிதியையே கதிகலங்க வைத்தவர் வீரபாண்டியார்.

டக்குன்னு சொல்லுங்க.. சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?.. அதிரடி ரிசல்ட்!டக்குன்னு சொல்லுங்க.. சீமான் அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?.. அதிரடி ரிசல்ட்!

அன்று வீரபாண்டி ஆறுமுகம்

அன்று வீரபாண்டி ஆறுமுகம்

திமுகவின் செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களில் கட்சி தலைமையை விமர்சிக்கும் ஒரே நபராக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இதனால் கருணாநிதி முன்னிலையிலேயே ஸ்டாலின் ஆதரவாளர்களா வீரபாண்டி ஆறுமுகம் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. வீரபாண்டி ஆறுமுகம், கருணாநிதி மறைவுக்குப் பின்னரும் இந்த பஞ்சாயத்து தலைமுறையாக தொடருகிறது.

இன்று வீரபாண்டியார் மகன் ராஜா

இன்று வீரபாண்டியார் மகன் ராஜா

வீரபாண்டி ஆறுமுகத்தைப் போல அவரது மகன் ஆ. ராஜாவும் இப்போது ஸ்டாலின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்புகிறார். அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழுவில், கொங்கு மண்டலத்தில் திமுக தோல்விகள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய வீரபாண்டி ராஜா, என்னுடைய மாவட்டத்தில் நான் சரியாக பணியாற்றினேன். இத்தனைக்கும் கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பே தரவில்லை. அவர்களையும் இழுத்துக் கொண்டுதான் வெற்றி பெற வைத்திருக்கிறேன். அதனால் தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் மீதுதான் நடவடிக்கை தேவை என பேசியிருக்கிறார் ராஜா.

கிச்சன் கேபினெட்

கிச்சன் கேபினெட்

இப்படி அப்பாவைப் போலவே தலைமையை விமர்சித்துப் பேசுகிறாரே வீரபாண்டி ஆ. ராஜா.. அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கிச்சன் கேபினட்டில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்விளைவுதான் வீரபாண்டி ஆ. ராஜாவின் கட்சி பதவி பறிக்கப்பட்டதாம். இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடப் போவதில்லை என கொதிப்புடன் இருக்கின்றனர் ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள்.

வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் குமுறல்

வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் குமுறல்

மேலும் கன்னியாகுமரியிலும் தூத்துக்குடியிலும் திமுக வெற்றியா பெற்றது? அங்குள்ள நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தூத்துக்குடியில் வேட்பாளர்களையே நிறுத்தாமல் தினகரனின் அமமுகவை ஜெயிக்க வைத்தார்கள்.. அப்படி ஜெயிக்க வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? என்றும் சீறுகின்றனர் ஆ. ராஜா ஆதரவாளர்கள்.

English summary
Salem Veerapandi A Raja supporters decide to revolt against DMK President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X