சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமியின் தொடர் சக்சஸ் பின்னணி இதுதானா.. வெளியான சுவாரசிய தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Edappadi Palanisamy-யின் வெற்றிகள் குறித்து வெளியான சுவாரசிய தகவல்- வீடியோ

    சேலம்: எடப்பாடி பழனிசாமி தன்னோட கையில் நிறைய வண்ணங்களில் கயிறுகள் கட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல எப்போதும் நெற்றியில் விபூதி பூசியிருப்பார்.

    எம்ஜிஆர், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா, இப்போது ஓபிஎஸ், எடப்பாடி என அதிமுக தலைமைகளுக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. தங்கள் கட்சி அதிகம் முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க கடவுள் பக்தியும், ஜோதிடர்களின் ஆலோசனையும்தான் காரணம் என்று நம்புகிறார்கள்.

    எம்ஜிஆர் கைரேகை பார்த்து அடுத்தவர்களுக்கு பலன் சொல்லும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருந்தார். ஜெயலலிதா ஜோதிடம், பூஜைகளில் அபார நம்பிக்கை கொண்டவர்.

    எடப்பாடி வெற்றி

    எடப்பாடி வெற்றி

    இதேபோல இப்போது எடப்பாடி பழனிச்சாமியும், கடுமையான கடவுள் நம்பிக்கை கொண்டவராக அறியப்படுகிறார். அதிலும் ஒரு விநாயகர் கோயில்தான், எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் இஷ்ட கோயிலாகவும், இஷ்ட தெய்வமாகவும் மாறிப்போயுள்ளதாம். சேலம் மாவட்டத்தில் கருமந்துறை என்ற ஊரில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் செய்யும் சிறப்பு வழிபாடுகள்தான், எடப்பாடியின் தொடர் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு!துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு!

    முதல் தரிசனம்

    முதல் தரிசனம்

    இதன் பின்னணியில் பெரும் வரலாறு உள்ளது. 2011ம் ஆண்டு ஏற்காடு எம்எல்ஏவாக இருந்த பெருமாள் திடீரென்று மரணமடைந்தார். எனவே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதிக்கு அப்போது பொறுப்பாளராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போதுதான் முதல்முதலாக கருமந்துறையில் உள்ள வெற்றி விநாயகர் கோயில் மகத்துவம் பற்றி அறிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

    சாதனை வெற்றி

    சாதனை வெற்றி

    ஏற்காடு இடைத்தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அபார வெற்றி அடைஞ்சது. வெற்றி என்றால் சின்ன வெற்றியெல்லாம் கிடையாது. இமாலய வெற்றி. திமுக வேட்பாளர் மாறனை 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் அதிமுக வேட்பாளர் சரோஜா. அந்த இடைத்தேர்தல் அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. இடைத்தேர்தல் வரலாற்றிலேயே முதல்முதலாக 90% வாக்குப்பதிவு நடந்தது, ஏற்காடு இடைத் தேர்தலில்தான்.

    வெற்றி விநாயகர்

    வெற்றி விநாயகர்

    இந்த இமாலய வெற்றியால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார் எடப்பாடி பழனிச்சாமி. கருமந்துறை வெற்றி விநாயகர் அருளால்தான் இந்த அதிசயம் நடந்தது என்று, எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக நம்பினார். இதன்பிறகு, 2016 சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சேலம் மாவட்ட அதிமுக செயலாளராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

    அபார வெற்றி

    அபார வெற்றி

    சேலம் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு என எடப்பாடிக்கு உத்தரவிட்டார் ஜெயலலிதா. எனவே, இரண்டாவது முறையாக கருமந்துறைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
    அதன்பிறகுதான் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக அபார வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகளையெல்லாம் மீறி இந்த வெற்றி நிகழ்ந்தது.

    யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

    சூறைத்தேங்காய்

    சூறைத்தேங்காய்

    இதையடுத்து ஜெயலலிதாவுக்கு எடப்பாடி மீது மேலும் அபார நம்பிக்கை ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கோ, வெற்றி விநாயகர் மீது நம்பிக்கை உச்சம் பெற்றது. இப்போது லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு, மூன்றாவது முறையாக கருமந்துறை வெற்றி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மார்ச் 22ம் தேதி கட்சி பிரமுகர்களுடன், வெற்றி விநாயகர் கோயிலுக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி, கோயில் வாசலில் அவரே சூறைத்தேங்காய் உடைத்து வழிபாடு செய்துள்ளார்.

    விநாயகர் முடிவு

    விநாயகர் முடிவு

    வெற்றி விநாயகரை வழிபட்ட பிறகு, கட்சி நிர்வாகிகளுக்கெல்லாம் வெற்றி விநாயகர் கோயில் பிரசாதத்தை முதல்வரே கொடுத்துள்ளார். அவர்களும் நெற்றியில் விபூதி பூசியபடிதான், பிரச்சாரத்துக்கு கிளம்பினார்கள். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த சாமி தரிசனங்கள் குறித்த தகவலால், வெற்றி விநாயகர் கோயில் பொதுமக்கள் மத்தியில் இப்போது அதிக பிரபலமாகியுள்ளது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில் வெற்றி விநாயகர் அதிமுக கூட்டணிக்கு அருள் செய்வாரா, அல்லது, விநாயகர் வேறு திட்டத்தில் உள்ளாரா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.

    English summary
    Vetri Vinayagar is behind Edappadi Palanisamy's continue victories, believes AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X