சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரியாற்றில் சாமியாடிய பெண்கள்.. 10 ஆண்டுக்கு முன் ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் இரு பெண்கள் அருள்வாக்கு கூறியதால் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை 15 நாட்களாக அந்த கிராமத்தினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ஒட்டப்பட்டியில் அம்மன் கோயில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அங்கிருந்த பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டியில் உள்ள காவிரியாற்றில் அப்பகுதி மக்கள் வீசிவிட்டனர்.

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி.. சாதித்த கூலித்தொழிலாளி மகள்.. உதவிய மருத்துவ மாணவர்கள் அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி.. சாதித்த கூலித்தொழிலாளி மகள்.. உதவிய மருத்துவ மாணவர்கள்

திருவிழா

திருவிழா

இதைத் தொடர்ந்து அவினாசியில் இருந்து புதிய சிலை உருவாக்கப்பட்டு ஒட்டப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகமும் நடைபெற்றுவிட்டது. வழக்கம்போல கோயிலில் இந்த ஆண்டு வைகாசி மாத திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்கள் சிலர் சாமியாடி அருள்வாக்கு கூறினர். மேலும் பூலாம்பட்டி காவிரியாற்றில் வீசிய பழைய சிலையை கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தால் மட்டுமே மழை பெய்யும் என கூறினர்.

சிலை தேடும் பணி

சிலை தேடும் பணி

இதையடுத்து மீனவர்கள் உதவியோடு அந்த சிலையை கிராம மக்கள் 15 நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியிலிருந்து முத்துகுளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களது உதவியுடன் சிலை தேடும் பணி நடைபெற்றது.

பரபரப்பு

பரபரப்பு

அப்போது காவிரி ஆற்றிலேயே 2 பெண்கள் சாமியாடி சிலை இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறினர். மேலும் சாமியாடியபடியே காவிரி ஆற்றுக்கு சென்றனர். இதையடுத்து அவர்களையும் பரிசலில் ஏற்றிக் கொண்டு தேடி பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Village people from Edappadi searches Amman Statue which was thrown away in Poolampatti Cauvery river, after Arulvakku given by 2 ladies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X