சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பெண் அதிகாரியை தொலைபேசியில் வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி மிரட்டியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா... என்பதாக ஆடியோ உள்ளது.

Recommended Video

    'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ

    தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட செயலாளராக உள்ளவர் அர்த்தநாரி. சீனியர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், சங்கத்தில் உள்ள அலுவலர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளுடன் அவ்வப்போது முறையிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றும் இலக்கியா என்ற அலுவலர், அனுப்ப வேண்டிய செலவு பட்டியல்களை கால தாமதம் செய்ததாகவும், இவருடை உயர் அதிகாரியான, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, இலக்கியாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்! ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

    வைரலாகும ஆடியோ

    வைரலாகும ஆடியோ

    இந்த பிரச்சனை தொடர்பாக அர்த்தனாரி, சாந்தியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார், அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் அர்த்தனாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் அலுவலர் சாந்தியிடம் அநாகரிகமாக பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சாந்தியிடம் ஆவேசமாக பேச்சு

    சாந்தியிடம் ஆவேசமாக பேச்சு

    அந்த ஆடியோவில் சாந்தியிடம் பேசும் அர்த்தனாரி, ``அந்த இலக்கியா பெண்ணிடம் என்னங்க பிரச்னை? அவுங்க என் தங்கை. கூப்பிட்டு பொறுமையா சொல்லுங்க. அநாவசியாமாகப் பேசுவதை நிறுத்திக்கோங்க. நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன். விளையாடுறீங்களா... நேரில் வந்தால் நாறிப்போயிடும். நீ அதிகாரியா... உனக்கு அறிவு இருக்கா... வந்தேன்னா ஆபீஸை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ ஓவரா போற, நீயும் ஒரு பொம்பள தானே... நான் நேர்ல வந்தால் தாங்க மாட்ட'' என்பதாக உள்ளது.

    யார் மீது தவறு

    யார் மீது தவறு

    இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த் துறை அலுவலர் அர்த்தநாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட அம்பேத்கார் மக்கள் இயக்கம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சாந்தியின் மீது தவறு இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பதற்கு பதிலாக, அர்த்தனாரி இவ்வாறு அநாகரிகமாக பேசியது தவறு என்று சாந்தியின் தரப்பு கூறுகிறது.

    சேலம் கலெக்டர் ஆபிஸ்

    சேலம் கலெக்டர் ஆபிஸ்

    அதேபோல் அர்த்தனாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்காத சாந்தி, ஆடியோவை அம்பேத்கர் மக்கள் இயக்கத்திடம் கொடுத்தது தவறு என அர்த்தனாரி தரப்பும் கூறிவருகிறார்கள். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    An audio has gone viral on social networking sites alleging that a female officer of the Adithravidar Welfare Department in Salem district was intimidated by a Revenue Officer's Association administrator over the phone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X