சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்!

ஹெல்மட் விவகாரம் குறித்து போலீசாருடன் நபர் ஒருவர் வாக்குவாதம் செய்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்!-வீடியோ

    சேலம்: "ஏங்க.. நான் லோக்கல்னு சொல்றேன் இல்லை.. இப்ப நான் ஹெல்மட் போடாததுதான் உங்களக்கு பிரச்சனையா? மீதி கேஸ் எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா" என்று நபர் ஒருவர் போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார்.
    ஹெல்மட் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக மாறி வருகிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இது சம்பந்தமாக ஓரு சம்பவம் நடந்துள்ளது.

    Viral Video about Helmet issue near Salem

    அது ஒரு தெரு போல காணப்படுகிறது. அக்கம்பக்கம் வீடுகள், வீட்டு வாசற்படியில் மக்கள் உட்கார்ந்துள்ளனர். ஒருசிலர் வீட்டுக்கு வெளியே லுங்கி, பனியனுடன் நடமாடுகிறார்கள். அப்போது, ராயல் என்பீல்டு பைக்கில் வந்த ஒரு நபரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மட் ஏன் போடலை என்று கேட்கிறார்.

    அதற்கு அந்த நபர் "நான் உள்ளுர்க்காரர் சார். லோக்கல்ல போறதுக்கு எதுக்கு ஹெல்மட்? எங்க வேணும்னாலும் அனுப்புங்க.. நான் பார்த்துக்கறேன். எதுக்கு சார் என்னை பிடிக்கறீங்க? நான் லோக்கல்-ன்னு சொல்றேன் இல்லை? திருடு போயி, ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அது கண்டுபிடிக்கிறது இல்லை.

    பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்

    அங்கே ஊருக்குள்ள ஆடு திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லே.. கோயில்ல திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லை.. அதெல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்ப நான் ஊருக்குள்ள ஹெல்மட் போடாததுதான் உங்களுக்கு பிரச்சனையா?

    எடுங்க இதை வீடியோ எடுத்து போடுங்க பார்க்கலாம். எப்ஐஆர் போடுங்க, அதை அனுப்புங்க.. எனக்கு எதை பத்தியும் கவலை கிடையாது" என்றார். உடனே போலீஸ்காரர், "நீ தண்ணி அடிச்சிருக்கியா" என கேட்க, "ஐயோ.. தண்ணி அடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. நாங்க லோக்கல் ரோட்டுக்குள்ள போறோம், எங்களை தடுக்காம அனுப்பி விட்டுருங்க.

    பொதுமக்களுக்கு நீங்க எல்லாம் மரியாதை தரணும். எப்ப பார்த்தாலும் போற வர்ற வண்டியை பிடிச்சிட்டு இருக்கங்களே.. நாங்க எந்த வேலைக்குமே அப்ப போககூடாதா" என்று கேட்கிறார். "வண்டி எல்லா ரிக்கார்ட்ஸையும் எடுத்துட்டு வா" என்று போலீஸ்காரர் அங்கிருந்து நகர்கிறார்.

    ஊருக்குள்ள.. லோக்கல்ல போறதுக்குகூட ஹெல்மட் தேவையா என்பது குறித்து நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    English summary
    A man argued with Policeman for not wearing helmet near Salem and this video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X