சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்!

ரோகிணிதான் மறுபடியும் கலெக்டராக நியமிக்க கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    ரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்! கலக்கும் போஸ்டர்கள்! -வீடியோ

    சேலம்: ரோகிணிதான் எங்களுக்கு திரும்பவும் கலெக்டராக வரவேண்டும் என்று சேலத்தில் மீண்டும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.

    171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி. "இளவயது கலெக்டர் மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று பலரால் பேசப்பட்டது.

    Wall posters in Salem about collector Rohin by Hindu Maha sabai

    மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது, பள்ளி மாணவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி கொள்வது என மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார்.

    இந்த சூழலில்தான் ரோகிணி மாற்றம் என்ற செய்தி வந்தது. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், எப்படியோ இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று மட்டும் கிசுகிசுக்கப்பட்டது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்த ரோகினி, சென்னை இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் கலெக்டர் ரோகிணியை மாற்றம் செய்யக்கூடாது, அவர்தான் எங்களுக்கு கலெக்டராக வரவேண்டும் என்று பொதுமக்களே வெளிப்படையாக கருத்து சொன்னார்கள். ரோகிணியை கிண்டல் செய்து மீம்ஸ்களை போட்டவர்கள், இன்று அதே ரோகிணிதான் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    இதில், அகில பாரத இந்து மகா சபையினர்தான் அன்றுமுதல் இப்போதுவரை தங்களது விருப்பத்தை விடாமல் தெரிவித்து வருகிறார்கள். "தமிழக அரசே! தமிழக அரசே!! நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சி தலைவர் ரோஹிணியை பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீணடும் ஆட்சிதலைவராக பணியமர்த்த வேண்டும்" என்ற போஸ்டர்கள் சேலம் முழுவதும் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    "Tamil Nadu Government should appoint Rohini as Collector again" by Hindu Maha Sabai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X