சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவு... இன்றாவது 100 அடியை எட்டுமா?

Google Oneindia Tamil News

மேட்டூர்: கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்றை விட இன்று குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 99.62 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் வரத்து காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.62 அடியாக உயர்ந்துள்ளது.

water level in the Mettur dam has increased to 99.62

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 35,000 கன அடியாக குறைந்துள்ளது. இது நேற்று காலை 70,000 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 850 கன அடி நீரும், காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால், கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பும் குறைந்துள்ளது.

"இவ்வளவுக்கு பிறகும்கூட, தன்னை விவசாயி என்று முதல்வர் கூறி கொள்கிறார்".. கனிமொழி காட்டம்

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. நேற்று இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி 99.81 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இந்த நிலையில் இன்றாவது மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
water level in the Mettur dam has increased to 99.62
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X