சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை...பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு...சேலம், ஈரோடு பயன்பெறும்!!

Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர் திறப்பு 13,500 லிருந்து 16,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, ஜுன் 12ஆம் தேதி பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

சமீபத்தில் அணையில் குடி மராமத்துப் பணியின் மூலம் தூர்வாறப்பட்டு இருந்தது. இதனால் வழக்கத்திற்கும் மாறாக பத்து நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

Water released from Mettur dam for irrigation has increased

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதீத மழை பெய்து வந்தது. இதனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்தாக இருக்கும் ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்தில் இருக்கும் மேட்டூர் அணைக்கு வந்தது. அணை நீர் மட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நீர் வரத்து குறைந்தது. தற்போது 99 அடியாக உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக கிழக்கு, மேற்கு கால்வாய்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி திறந்துவிடப்படும். இந்தாண்டு திறக்கப்படவில்லை. இதையடுத்து, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

சாமியானா பந்தல், மைக் செட்டுடன் நாளை முதல் சென்னையில் களைகட்டும் டாஸ்மாக் திறப்பு விழாசாமியானா பந்தல், மைக் செட்டுடன் நாளை முதல் சென்னையில் களைகட்டும் டாஸ்மாக் திறப்பு விழா

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, கருப்பண்னன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். விநாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை 137 நாள்கள் தண்ணீர் தொடர்ந்து பாசனத்திற்கு விடப்படும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் நிலமும், ஈரோட்டில் 17,236 ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11, 323 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Water released from Mettur dam for irrigation has increased
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X