சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அதிர்ச்சி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Motor vehicle act | மத்திய அரசின் அலற வைக்கும் அபராதங்கள்

    சேலம் : 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் பெற இயலாது என்றும் இது தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் உச்சபட்சமாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    who drive below 18 age, he cannot get license up to 25 years : new motor Vehicles act 2009

    இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் பெற இயலாது என்றும் இது தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    இது தொடர்பாக சேலம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேபோல் கார் ஓட்டுவது 2 சதவீதம் அதிகரித்து உள்ளது. போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருந்தால் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும். அதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீட்டாளர்களை கவர ஆபாச நடனம்.. வைரல் வீடியோபாகிஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீட்டாளர்களை கவர ஆபாச நடனம்.. வைரல் வீடியோ

    சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்து ஓட்டவிடுகிறார்கள். அவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள். மேலும் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள் இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள்.

    எனவே தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

    மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்குத் தான் எனவே எந்த காரணம் கொண்டும் வாகனத்தை சிறார்கள் கையில் கொடுக்காதீர்கள்" என்றார்கள்.

    English summary
    Motor Vehicles (Amendment) Bill 2009: who drive below 18 age, he cannot get licence up to 25 years
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X