சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா.. திடீர் பரபரப்பு

ரயிலில் பணம் வரும் தகவலை சொன்னது யார்? என விசாரணை துவங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் ரயில் கொள்ளையர்களுடன் வங்கி அதிகாரிகள் உடந்தையா?- வீடியோ

    சேலம்: குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் அவ்வளவு பணம் வருகிறது என்ற தகவல் கொள்ளையர்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னடியே தெரியும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களுக்கு தகவல் அளித்த கருப்பு ஆடு யார் என நடவடிக்கை துவங்கி உள்ளது.

    சேலம் ரயிலில் ஓட்டை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் 7 பேர் பிடிபட்டார்கள். இந்த இனத்தின் குலத்தொழிலே கொள்ளைதானாம்!! இது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கு.. பரபரப்பான கட்டத்தில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை! சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கு.. பரபரப்பான கட்டத்தில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

    செயல்முறை விளக்கம்

    செயல்முறை விளக்கம்

    10 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கொள்ளையர்கள் ஒருவழியாக வாயை திறந்து வாக்குமூலம் தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் செயல்முறை விளக்கமும் போலீசார் முன்னிலையில் நடத்தி காட்டினர்.

    தகவல் வெளியானது

    தகவல் வெளியானது

    இந்நிலையில், இது சம்பந்தமாக அடுத்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது, சேலத்தில் இருந்து ரயில் மூலம் பணம் எடுத்து செல்வது குறித்து, ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த கொள்ளையர்களுக்கு தகவல் கிடைத்துவிட்டதாம். அதற்கு பிறகுதான் அந்த பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என திட்டம் போட்டார்களாம்.

    யார் சொன்னது?

    யார் சொன்னது?

    இவ்வளவு பெரிய பணத்தொகையும், பணபரிமாற்றமும் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம், சேலம், நாமக்கல் மாவட்ட வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்குதான் தெரியும். மேலும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தெரியும். இந்த அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், எங்கோ வடமாநில கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? இதுதான் நம்முடைய சிபிசிஐடி போலீசாரின் அடுத்த கேள்வி.

    தீவிர கண்காணிப்பு

    தீவிர கண்காணிப்பு

    இதனால் சேலம், நாமக்கல், சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பணம் பற்றிய தகவலை அளித்த துருப்புச்சீட்டு யார்? அந்த கருப்பு ஆடு யார் யார் என விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Who informed smugglers about the money coming from the particular train?: CBCID
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X