உச்சிக்கு ஏறிய காமம்.. 66 வயது பாட்டி.. தண்ணி அடிப்பாராம்.. கள்ளக்காதல் வேறு.. கடைசியிலே பாருங்க
சேலம்: 66 வயது பாட்டியுடன் தொடர்பு வைத்து, பலமுறை உல்லாசமாக இருந்து, கடைசியில் கொலையே செய்துவிட்டார் அந்த நபர்.. சேலம் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி புதூரை சேர்ந்தவர் சுந்தரம்... மனைவி பெயர் மைலி.. 66 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
3 சம்பவம்.. ஆளுநர் போகும் இடமெல்லாம் கேட் போட்ட திமுக..
ஆனால், சுந்தரம், மனைவி மைலியை பிரிந்து சென்றுவிட்டார்.. காரணம், இந்த 66 வயதாகும் மைலி பாட்டிக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்கிறதாம்.

66 வயது பாட்டி
இப்படித்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற மைலி பாட்டி, வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.. கடைசியில் பார்த்தால், ஊத்தோடை பகுதியில் மாவு அரைக்கும் மில் அருகே கரட்டு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்... உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து கிடந்தது.. யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை. எனவே, போலீசாருக்கு விஷயம் பறந்ததையடுத்து, விசாரணையும் அதிரடியாக துவங்கியது.

போஸ்ட் மார்ட்டம்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மைலி பாட்டியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அப்போது, மைலியின் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்தது போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவந்தது.. இதனால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். .. அப்போதுதான், அதே பகுதியை சேர்ந்த கோவிந்ததராஜ் என்பவர் சிக்கினார்..

உல்லாசம்
இவருடன்தான் கடைசியாக மைலியை பார்த்ததாக அந்த பகுதி மக்கள் சொன்னார்கள்.. இதனால், அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.. கோவிந்ராஜூக்கு 52 வயதாகிறது. கல்யாணமாகிவிட்டது.. 2 மனைவிகள் இருக்கிறார்கள்.. முதல் மனைவிக்கு 2 மகன்களும், 2வது மனைவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்... ஆனால், 2 மனைவிகளுமே அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்... அதனால், தனியாக இருந்துள்ளார்..

உடலுறவு
அப்போதுதான் மைலியை சந்தித்துள்ளார்.. 3 வருடங்களாகவே கள்ள உறவு இருந்துள்ளது.. 2 பேருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பார்களாம்.. பிறகு ஜாலியாக இருப்பார்களாம். அப்படித்தான், கடந்த 22ம் தேதி நைட் கோவிந்தராஜ் வீட்டிற்கு மைலி வந்துள்ளார்.. வழக்கம்போல், தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளனர். பாட்டிக்கு போதை மண்டைக்கேறிவிட்டது.. அதனால், கோவிந்தராஜை திட்டியுள்ளார்..

ரத்த வெள்ளம்
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கீழே கிடந்த கட்டையை எடுத்து, மைலியின் நெஞ்சில் ஓங்கி அடித்துவிட்டு, அப்படியே குப்புற படுத்து தூங்கிவிட்டார்.. ரத்தவெள்ளத்தில் மைலி கீழே விழுந்து இறந்துள்ளார்.. கோவிந்தராஜூம் பக்கத்திலேயேதான் படுத்திருந்திருக்கிறார்.. காலையில் போதை தெளிந்துதான், மைலி இறந்ததே அவருக்கு தெரியவந்துள்ளது.. இவ்வளவும் போலீசில் சொன்னதையடுத்து, அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. 66 வயசு மைலி பாட்டிக்கு இதெல்லாம் தேவையா?!