சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக அலுவலகம் சென்றது ஏன்.. பியூஸ் மானுஸ் பரபரப்பு பேட்டி .. 7 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ் மீது சரமாரி தாக்குதல் | piyush manush

    சேலம்: தன் குடும்பத்தினர் குறித்து சிலர் அருவருக்கத்தக்க பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிட்டதாகவும் அதை கேட்கவே தான் பாஜக அலுவலகம் சென்றதாகவும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் கூறியுள்ளார்.

    சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்றார். பேஸ்புக்கில் நேரலை செய்தபடி, அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன என்று கேட்டார்.

    இதனால் பாஜக நிர்வாகிகள் மற்றும் பியூஸ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக நிர்வாகிகள் சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். செருப்பு மாலையுடன் காணப்பட்ட பியூஸ் மானுஷை போலீசார் வந்து மீட்டு சென்றனர்.

    3 ஆக பிரிச்சா வேலூரில் 'அது' இருக்காது... 2 மாவட்டங்களே போதும்.. மக்கள் ஆதங்கம்3 ஆக பிரிச்சா வேலூரில் 'அது' இருக்காது... 2 மாவட்டங்களே போதும்.. மக்கள் ஆதங்கம்

    பியூஸ் மீது வழக்கு

    பியூஸ் மீது வழக்கு

    தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் பியூஸ் மானுஸ் மீது போலீசில் சேலம் பாஜக மாவட்ட தலைவர் கோபிநாத் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் பியூஸ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், தாக்குதல், கொலை மிரட்டல், அரசை அவதூறாக பேசுதல், கூட்டு சதி செய்தல், கெட்ட வார்த்தை பேசுதல் உள்பட 7 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பியூஸ் போலீசில் புகார்

    பியூஸ் போலீசில் புகார்

    இதேபோல் பியூஷ் மனுஷ் அளித்த புகாரின் பேரிலும் அஸ்தம்பட்டி போலீசார் பாஜகவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குடும்பத்தினர் குறித்து அவதூறாக பதிவு

    குடும்பத்தினர் குறித்து அவதூறாக பதிவு

    இந்நிலையில் பாஜக அலுவலகத்திற்குள் சென்றது ஏன் என்பது குறித்து பியூஸ் மானுஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை விமர்சித்து வருகிறேன். ஆனால் அந்த கட்சியினர் என்னை எவ்வளவு அவதூறாக பேசினாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் என் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி அவதூறாக அவருவருக்கத்தக்க வகையில் பதிவிடுகிறார்கள். இது குறித்து போலீசில் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை.

    அடித்து விட்டார்கள்

    அடித்து விட்டார்கள்

    இதனால் மன உளைச்சல் அடைந்த நான் விளக்கம் கேட்வும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து விசாரிக்கவும் சென்றேன். ஆனால் அங்கிருந்த 10 பேர் எனக்கு செருப்பு மாலை அணிவித்து கொடூரமாக தாக்கினர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்

    English summary
    why i went salem bjp office : activist piyush manush explain, he said., some boys Awkward post against my family in social media, that's why i went to salem bjp office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X