சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Salem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா?- வீடியோ

    சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி உறுதியுடன் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    சேலம்: சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி உறுதியுடன் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து முதல்வர் இப்படி செயல்படுவதாக கூறப்படுகிறது.

    சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை சேலம் இடையே 8 வழி சாலையாக 276 கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆனால் மக்கள்

    ஆனால் மக்கள்

    ஆனால் இதற்கு மக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

    மக்கள் என்ன

    மக்கள் என்ன

    இந்த திட்டம்தான் அதிமுக கட்சி சேலத்தில் மக்களவை தேர்தலில் தோல்வி அடையவும் காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. இந்த சேலம் 8 வழி சாலை திட்டம் காரணமாக அதிமுக அரசுக்கு எதிராக சேலம் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதுதான் தேர்தலிலும் எதிரொலித்தது என்று கூறப்படுகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த திட்டத்தை 'அதி விரைவு சாலை'' என்று பெயர் மாற்றியாவது முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தன்னுடைய ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட ஸ்டார் திட்டமாக 8 வழி சாலை திட்டம் இருக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதியில் தான் முத்திரை பதிக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    எப்படி செய்தனர்

    எப்படி செய்தனர்

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உத்தர பிரதேச முதல்வராக இருந்த போது தனது சொந்த கிராமத்தில் ஏர் போர்ட் கட்டும் அளவிற்கு அதை வளர்ச்சி அடைய செய்தார். பீகாரில் லாலு பிரசாத் யாதவும் தனது சொந்த கிராமத்திற்கு நிறைய நலத்திட்டங்களை செய்தார். அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் நினைப்பதாக தெரிகிறது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இதுதான் முதல்வர் பழனிச்சாமி எட்டு வழி சாலை திட்டத்தை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்க காரணம் என்று கூறுகிறார்கள். பாஜக எப்போதும் சாலை திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் என்பதால் தானும் அதேபோல் செய்ய முதல்வர் நினைப்பதாக கூறுகிறார்கள்.

    எதிர்காலம்

    எதிர்காலம்

    அதேபோல் இந்த சாலை திட்டத்தை சேலம் மக்கள் எதிர்த்தாலும் எதிர்காலத்தில் அதை அவர்கள் ஆதரிக்க வாய்ப்புள்ளது. சேலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. சாலை போடப்பட்ட பின் புதிய தொழிற்சாலைகள் வரும். இது மக்களிடம் வரவேற்பை பெறும் என்று முதல்வர் நினைக்கிறார். இந்த திட்டத்தை தனது அடையாளமாக மாற்ற அவர் நினைப்பதாக தெரிகிறது.

    எடுப்பார்

    எடுப்பார்

    ஆனால் இப்போது வரை இந்த திட்டத்திற்கு சேலம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க பொதுமக்கள் யாரிடமும் வரவேற்பு இல்லை. தற்போது நடந்து கொண்டு இருக்கும் சேலம் சாலை வழக்கு முடிந்த பின்புதான் இதில் முதல்வர் பழனிச்சாமி அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பார் என்று தெரியும்.

    English summary
    Why TN CM is still focusing on Salem 8 way project even after too many backfires from people?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X