அந்தரத்தில் தொங்கி கொண்டே அலறிய சிறுவன்.. இப்படியும் ஒரு ஸ்கூல் டீச்சரா.. பகீரை கிளப்பும் வீடியோ
கான்பூர்: மாடியில் இருந்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு மாணவனுக்கு தண்டனை தந்துள்ளார் தலைமை ஆசிரியர் ஒருவர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பகீரை கிளப்பிகொண்டிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அஹ்ரௌராவில் "சத்பவ்னா ஹிஷன் சன்ஸ்தான் ஜூனியர்" என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு கடந்த 28-ம் தேதி வகுப்புகள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன.
ஆந்திராவில் திடீரென பரவும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா.. 7 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி பின்னணி
அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கிளாஸ் ரூமீல் சேட்டை செய்தபடியே இருந்துள்ளான்.. பிறகு மதியம் சாப்பிடும் நேரத்திலும் மற்ற குழந்தைகளிடமும் குறும்பு செய்து கொண்டே இருந்தான்..

ஆத்திரம்
இதை பார்த்து ஆத்திரமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவனின் காலை பிடித்து, தூக்கி கொண்டு வெளியே வந்தார்.. அது முதல் மாடி என்பதால், கட்டிடத்தின் மேலிருந்து குழந்தையின் ஒரு காலை பிடித்து கொண்டு, அப்படியே கீழே தொங்கவிட்டார்.. இதனால் மாணவன் கதறி அலறினான்.. அங்கிருந்த மற்ற குழந்தைகள் இதை பார்த்து பயந்து ஓடினார்கள்..

குழந்தை
மேலும் சில குழந்தைகள் பதைபதைப்புடன் நடப்பதை வேடிக்கை பார்த்தனர். அக்கம் பக்கத்தினரும் அங்கு சூழ்ந்துவிட்டனர்.. மாடியில் சிறுவனை தொங்கவிட்டு கொண்டே இருந்த நிலையில், அந்த குழந்தையை மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறுத்தினார் பள்ளி தலைமை ஆசிரியர்.. குழந்தையும் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டான்.. அதன்பிறகே அவனை மேலே தூக்கினார்..

மாவட்ட நீதிபதி
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. மாணவன் அந்தரத்தில் தொங்கி கொண்டு அலறும் அந்த வீடியோ வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த வீடியோ இறுதியில் மாவட்ட நீதிபதி பிரவீன் குமாரின் பார்வைக்கும் சென்றது.. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.. அதன் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை
இதுகுறித்து சிறுவனின் தந்தை சொல்லும்போது, "என் மகன் மற்ற குழந்தைகளுடன் சாப்பிட போனான்.. அவன் எப்பவுமே வீட்டில் குறும்பு செய்து கொண்டே இருப்பான். ஸ்கூலிலும் அப்படி நடந்து கொண்டதால், இப்படி பள்ளி முதல்வர் தண்டனையை தந்துள்ளார்" என்றார். இந்த வீடியோ தற்போதும் வைரலாகி கொண்டிருக்கிறது.. பள்ளி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.