சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,164 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் சீனா, இந்தியாவை தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூர். இங்கு ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

1,164 Coronavirus patients discharged in Singapore

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,098 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றும் கூட சிங்கப்பூரில் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் நேற்று 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதும் இதுதான் முதல் முறையாகும். சிங்கப்பூரில் மொத்தம் 5,973 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா- அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் ஒரே நாளில் 13,761 பேருக்கு பாதிப்பு- 835 பேர் பலி கொரோனா- அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் ஒரே நாளில் 13,761 பேருக்கு பாதிப்பு- 835 பேர் பலி

Recommended Video

    WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus

    இதனிடையே கொரோனா வைரஸ் சிங்கப்பூரில்தான் அதிக நாட்கள் நிலைத்திருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத் தலைவர் பேராசிரியர் லியோ யீ சின் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் அரசு தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    English summary
    1,164 cases were discharged in Singapoe even as 752 new cases were identified.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X