சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கப்பூரில்..வேலைக்கார பெண் சித்ரவதை செய்து கொலை.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்ததாக இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.

அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் சோனியா குடும்பம் அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் சோனியா குடும்பம்

இதற்கிடையே வேலைக்கார பெண் பியாங்நகாய்டான் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கொடூர கொலை

கொடூர கொலை

பிரேத பரிசோதனையில் வேலைக்கார பெண் பியாங்நகாய்டான் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது உடலில் சூடு வைத்த 31 காய வடுக்கள், 47 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதுகுறித்து காயத்ரி முருகையனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் பியாங்நகாய்டானை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

கடும் சித்ரவதை

கடும் சித்ரவதை

அதாவது 11 மாதங்கள் வேலை செய்த அந்த பெண்ணை காயத்ரி முருகையன் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். மேலும் அவரின் கைகளை கட்டிப்போட்டு உடல் முழுவதும் சூடு வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலைக்கார பெண் பியாங்நகாய்டான் மூளையில் காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

ஒப்புக் கொண்டார்

ஒப்புக் கொண்டார்

ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனை காப்பாற்றவும் வீட்டு வேலைக்கு சென்ற பியாங்நகாய்டானுக்கு நேர்ந்த கதி கண்டு சிங்கப்பூர் மக்கள் கண்ணீர் வடித்தனர். இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் கைது செய்யப்பட்டு அவர் மீது 28 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அனைத்தையும் அவர் ஒப்புக் கொண்டார்.

30 ஆண்டுகள் சிறை

30 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் வேலைக்கார பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. இது தொடர்பாக சேனல் நியூஸ் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. உள்நாட்டில் நடத்த குற்றத்திற்காக சிங்கப்பூரில் வழங்கப்பட்ட மிக நீண்ட சிறைத்தண்டனை இது என்றும் கூறப்படுகிறது.

English summary
A woman of Indian origin has been sentenced to 30 years in prison for beating a maid to death in Singapore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X