சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: சிங்கப்பூரில் 1மீ. இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை- 10,000 வெள்ளி அபராதம்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் 24 பேரை கொரோனா பலி கொண்டிருக்கிறது. 2,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Coronavirus: Singapore warns over Safe distancing rules

    இதேபோல் சிங்கப்பூரிலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    சிங்கப்பூரில் அலுவலகங்கள், பள்ளிகளைத் தவிர பிற இடங்களில் 10 பேருக்கு அதிகமாக ஒன்று கூடல் கூடாது; பொது இடங்களில் அனைவரும் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.

    கொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா கொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா

    இத்தகைய பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.

    English summary
    Singapore today warned over the following of the Safe distancing rules.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X