சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் தங்குமிடத்தில் புதிய கிளஸ்டராக பரவும் கொரோனா.. 4800 பேர் தனிமைப்படுத்த நோட்டீஸ்

Google Oneindia Tamil News

மஜூலா சிங்கப்பூரா: சிங்கப்பூரில் மிகப் பெரிய தங்குமிடத்தில் 58 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு தங்கியுள்ள 4800 தொழிலாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் சிங்கப்பூர் 46-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 56,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் பலியாகிவிட்டனர். 54,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மீண்டும்...கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு... தேவை பரிசோதனை!! சென்னையில் மீண்டும்...கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு... தேவை பரிசோதனை!!

இந்த நிலையில் வெறும் 2,213 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிங்கப்பூரில் வெளிநாட்டினர் அதிகமானோர் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்கள். அதில் குறிப்பாக தமிழர்கள் அதிகம்.

இவ்வாறு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் உள்ள சுன்கெய் தென்கா லாட்ஜ் எனப்படும் தங்குமிடத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மிகப் பெரிய தங்குமிடமான இங்கு புதிதாக 48 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா உறுதியானது.

COVID-19 cases at Singapores largest dormitory

இவர்கள் அனைவருக்கும் அறிகுறி ஏதும் இல்லை. இவர்கள் புதிய கிளஸ்டர்களாக உருவெடுத்துள்ளனர். சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கியுள்ள அந்த இடத்தில் 4800 பேரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
Sungei Tengah lodge dormitory in Singalore has kargest covid 19 clusters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X