சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: தமிழில் பேசுவோம் -தமிழை நேசிப்போம் என்ற தலைப்பில் இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழி மொழி விழா நடைபெற்றது.

உலகின் மூத்த மொழியாம தமிழ் மொழியின் சிறப்புகளையும், பெருமைகளையும் புதிய தலைமுறையினரிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு கவிஞர் அல்லது தமிழ் இலக்கியவாதி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவர்.

Federation of indian muslims organized Tamil mozhi vizha

இந்நிலையில் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் இருந்து காணொலி மூலம் நடத்தப்பட்ட தமிழி மொழி விழாவில் கவிஞர் யுகபாரதி கலந்துகொண்டார். தமிழின் செழுமை குறித்தும், தொன்மை பற்றியும் இந்தக் கருத்தரங்கில் விரிவாக பேசப்பட்டது.

விரைவில் உங்களின் மாத சம்பளம் குறையப் போகிறது.. என்ன காரணம் தெரியுமா?விரைவில் உங்களின் மாத சம்பளம் குறையப் போகிறது.. என்ன காரணம் தெரியுமா?

மேலும், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்ற செந்தமிழ் வீடு என்ற பெயரில் குறு கருத்தரங்கமும் நடைபெற்றது. கவிஞர் யுகபாரதியுடன் சிங்கப்பூர் நீ ஆன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி ரியானா ஹஸ்மியும் சிறப்பு பேச்சாளராக இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

Federation of indian muslims organized Tamil mozhi vizha

இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் என்ற முழக்கத்துடன் நடைபெற்று முடிந்த இந்த தமிழ் மொழி விழாவில் தமிழுக்கு உள்ள சிறப்புகளை போல் உலகின் வேறு எந்த மொழிக்கும் சிறப்புகள் கிடையாது என்பது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. கடல் கடந்து வாழ்ந்து வந்தாலும் தாய்மொழியாம் தமிழ் மொழி மீது கொண்ட பற்று காரணமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

English summary
Federation of indian muslims organized Tamil mozhi vizha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X