சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிலிருந்து தேறி வர பல வருடமாகும்.. சிங்கப்பூர் துணைப் பிரதமர் கவலை!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கொரோனாவைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மீண்டு வர பல வருடமாகும் என்று சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இன்று புதிதாக 344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 37,527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் தாக்கலின் போது பேசிய துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், இந்த கொரோனா தாக்குதலிலிருந்து மீண்டு வர பல வருடமாகும் என்று தெரிவித்தார்.

கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ! கொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ!

மீண்டு வருவது கஷ்டம்

மீண்டு வருவது கஷ்டம்

அவர் பேசுகையில், சிங்கப்பூரில் மிகப் பெரும் பொருளாதார பாதிப்பை கொரோனாவைரஸ் பரவல் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வருவது சவாலானது. நெடுங்காலம் பிடிக்கும். தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

கண்டுபிடிக்க கருவி

கண்டுபிடிக்க கருவி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக அணிந்து கொள்ளக் கூடிய எளிமையான சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிந்து கொள்ளக் கூடிய சாதனம் நாட்டில் உள்ள 50.7 லட்சம் குடிமக்களுக்கும் அளிக்கப்படவுள்ளது. விரைவில் இது தொடங்கும். இந்த கருவியை அணிந்து கொண்டால், நாம் பேசும் நபருக்கோ அல்லது நமக்கோ கொரோனா இருந்தால் அதை நமக்கு சமிக்ஞை மூலமாக தெரிவிக்கும்.

உலகிலேயே முதல் முறை

உலகிலேயே முதல் முறை

உலகிலேயே இப்படி ஒரு அதி நவீன சாதனத்தை சிங்கப்பூர்தான் முதன் முதலாக பயன்படுத்தவுள்ளது. இந்த சாதனத்தை நமது உடலில் அணிந்து கொள்ளலாம் அல்லது கைப்பையிலும் போட்டு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறினார் ஹெங். சிங்கப்பூரிலும் இந்தியாவைப் போலவே தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் சலூன்கள் திறப்பு

மலேசியாவில் சலூன்கள் திறப்பு

இதற்கிடையே, அண்டை நாடான மலேசியாவில் ஜூன் 10ம் தேதி முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளனவாம். அதேசமயம், அவற்றுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நாட்டு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகையில், சலன், அழகு நிலையத் துறையில் மொத்தம் 75,500 பணியாளர்கள் உள்ளனர். இவர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வருகிறது.

கட்டிங் - ஷேவிங்

கட்டிங் - ஷேவிங்

இதற்கிடையே, அண்டை நாடான மலேசியாவில் ஜூன் 10ம் தேதி முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளனவாம். அதேசமயம், அவற்றுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நாட்டு மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகையில், சலூன், அழகு நிலையத் துறையில் மொத்தம் 75,500 பணியாளர்கள் உள்ளனர். இவர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வருகிறது.

English summary
Malaysia has allowed barbar shops from June 10. Singapore has expressed its worries over the after impact of Coronavirus spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X